• Feb 27 2026

பாண்டியனை ஆட்டிப்படைக்க போகும் கோமதி.! மீனாவின் ஸ்கெட்ச் வேலை செய்யுமா.?

subiththira / 3 days ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, கோமதி மீனாவுக்கு போன் எடுத்து உங்க மாமா நைட் எதுவுமே சாப்பிடல என்று சொல்லுறார். அதைக் கேட்ட மீனா ஒரு நாள் சரியா சாப்பிடாமல் இருந்தால் ஒன்னும் ஆகாது என்கிறார். அதுக்கு கோமதி அவர் பாவம் என்கிறார். பின் மீனா உங்களை கஷ்டப்படுத்தினவர் தானே அனுபவிக்கட்டும் என்கிறார். அதனை அடுத்து கோமதி நீ சொன்ன மாதிரியே உங்க மாமாவை மாத்திக்காட்டுறேன் என்று கெத்தா சொல்லுறார்.

அதைக் கேட்ட ராஜி கோமதியைப் பார்த்து அப்ப மீனா அக்கா வேலை தானா இது எல்லாமே என்று கேட்க, கோமதி அதுக்கு ஆமா என்கிறார். மறுபக்கம் செந்தில் மீனா கதைச்சதைக் கேட்ட உடனே மொத்த குடும்பத்தையும் கன்ரோலில எடுத்திட்டியா என்கிறார். அதனை அடுத்து குமார் காந்திமதியைப் பார்த்து நான் மிகப்பெரிய முட்டாள் அப்பத்தா என்னை மாதிரி யாராலுமே இருக்க முடியாது என்கிறார்.


மேலும்,பழி வாங்குறேன் என்ற பெயரில அரசியை சரியா கஷ்டப்படுத்திட்டன் என்கிறார் குமார். அப்படியே கொஞ்ச நேரம் அரசியைப் பற்றிக் கதைச்சு பீல் பண்ணிக் கொண்டிருக்கிறார் குமார். மறுபக்கம் மயில் சரவணனுக்கு தங்கச்சிட போனில இருந்து கால் எடுக்கிறார். அதை ஆன்ஸர் பண்ண சரவணன் மயிலின்ட குரலைக் கேட்ட உடனே கோபப்பட்டு அந்த காலை கட் பண்ணுறார்.

தொடர்ந்து அஞ்சலியோட கதைச்சுக் கொண்டிருக்கிறார் சரவணன். மறுநாள் காலையில கோமதி பாண்டியனை கதைக்க வைக்கிறதுக்கான வேலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்.இதுதான் இன்றைய எபிசொட். 

Advertisement

Advertisement