• Jul 07 2026

பிச்சை எடுத்தாலும் அவருடன் நடிக்க மாட்டேன்.! நடிகை சோனா அதிர்ச்சி பேட்டி

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வெளியான 'பூவெல்லாம் உன் வாசம்' என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை சோனா. அதன் பின்பு 'குரு என் ஆளு', 'அழகர் மலை', 'ஒன்பதுல குரு', 'குசேலன்', 'யாமிருக்க பயமேன்' போன்ற படங்களில் நடித்தார்.

தமிழ் சினிமாவில் மட்டுமில்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற படங்களிலும் சீரியல்களிலும் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமாகக் காணப்படுகின்றார்.

இந்நிலையில், நடிகை சோனா சமீபத்தில் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு வடிவேலு பற்றி தெரிவித்த கருத்துகள் வைரலாகி வருகின்றன.


அதன்படி அவர் கூறுகையில், வடிவேலுவுடன் மீண்டும் நடிப்பதைவிட பிச்சை எடுத்தும் வாழ்ந்துவிடுவேன், சுயமரியாதை முக்கியம், அந்த அனுபவத்திற்குப் பிறகு வடிவேலுவுடன் மீண்டும் நடிக்க வேண்டாம் என்பதற்காக 16-க்கும் மேற்பட்ட பட வாய்ப்புகளை மறுத்தேன், பணத்தைவிட எனது சுயமரியாதை முக்கியம் என தெரிவித்துள்ளார்.

நடிகை சோனாவும் வடிவேலுவும் 'குசேலன்' படத்தில் இணைந்து நடித்திருந்தனர். இதன்போது நடித்த அனுபவத்தை அவர் பகிர்ந்துள்ளார். தற்போது இந்த விஷயம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகக் காணப்படுகிறது.

Advertisement

Advertisement