• May 03 2024

காட்டுத்தீயாய் பரவும் விக்கி-நயன் திருமண வீடியோ-கொண்டாடும் ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக இருக்கும் நயன்தாரா நானும் ரவுடி தான் படத்தில் நடித்ததன் மூலம் அப்படத்தின் இயக்குநரான விக்னேஷ் சிவன் உடன் காதல் வயப்பட்டு அவர்கள் காதல் வாழ்க்கை தற்போது 7 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து வருகின்றது.

கடந்தாண்டு நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் இவர்களது நிச்சயதார்த்தம் முடிந்தது என்பதனை ஒரு பேட்டியில் நயன்தாரா தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மகாபலிபுரத்திலுள்ள மகாப்ஸ் ஃபைவ் ஸ்டார் ஓட்டலில் நேற்று ஜுன் 9ம் தேதி முகூர்த்தத்தில் நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணம் நடைபெற்றுள்ளது. முழுக்க முழுக்க பாரம்பரிய முறைப்படியும், இந்து முறைப்படியும் இவர்களின் திருமணம் நடைபெற்றுள்ளது என
கூறப்பட்டது.

மகாபலிபுரத்தரில் நடக்கும் திருமணத்திற்கு மிக குறைவானவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், திரையுலக பிரபலங்களை அழைத்து சென்னையில் பிரம்மாண்ட திருமண வரவேற்பை நடத்த திட்டமிட்டு வருவதாக கூறப்படுகின்றது.

அத்தோடு திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11ம் தேதி மதியம் நயன்தாராவுடன் சேர்ந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாக கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் விக்னேஷ் சிவன் தெரிவித்து இருந்தார்.

நயன்தாரா - விக்னேஷ் சிவன் திருமணத்தை ஒளிபரப்பு செய்ய பல ஓடிடி தளங்கள் போட்டி போட்டு, கடைசியாக பெரிய தொகைக்கு நெட்ஃபிளிக்ஸ் தளம் ஒளிபரப்பு உரிமத்தை வாங்கி இருந்தது

மேலும் இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் செம ட்ரெண்ட் ஆகி வருகின்றது. பலரும் இவர்களின் திருமண புகைப்படத்தை பகிர்ந்து வரும் நிலையில் , விக்னேஷ் சிவன் - நயன்தாரா அணிந்திருந்த உடை அதற்கான காரணம் மற்றும் திருமண செட் அப் குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவை விக்கேஷ் சிவன் பகிர்ந்துள்ளார்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement