• May 31 2026

திரிஷா தங்கச்சி மீது ஏன் இவ்வளவு வன்மம்.?விஜயை வாழ விடுங்க.. ஆவேசத்தில் கூல் சுரேஷ்

Aathira / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சிறந்த காமெடி நடிகராக திகழ்ந்தவர் கூல் சுரேஷ். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசனில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார். அதன் பின்பு இவருடைய பதிவுகள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்த நிலையில், சுரேஷ் விஜய்-திரிஷா பற்றி தெரிவித்த கருத்து இணையதளத்தில் வைரலாகி வருகின்றது. அதன்படி அவர் கூறுகையில்:

நடிகர் விஜய் அவருடைய இயக்குனர் அட்லீ மனைவிக்கு வளைகாப்பு என்பதற்காக பாம்பே சென்றுள்ளார். ஆனால் நிறைய பேர் இதை வைத்து தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி, அந்த விஷயத்தை திரிஷா தங்கச்சியோடு இணைத்து வதந்திகள் பரப்பி வருகின்றனர்.


நீங்க ஒரு போலியான விஷயத்தை உங்களுடைய கொள்கை கோட்பாடுக்காக இப்படி பண்ணுவது சரி இல்லை. விஜய் சார் போனது அட்லீ மனைவியின் வளைகாப்புக்காகதான். அந்த இடத்திற்கு திரிஷாவும் சென்றிருக்கலாம், ஏனெனில் அவர் சினிமா வட்டாரத்தில் தான் காணப்படுகின்றார்.

ஆனால் அவர்கள் இருவரும் ஒன்றாக சென்றதையோ, அவர்கள் இருவரும் வளைகாப்பு நடந்த பெண்ணிற்கு மஞ்சள் பூசியதோ, காப்பு அணிவித்ததையோ யாரும் பார்க்கவில்லை. விஜயை வாழ விடுங்க, அவர்களுக்கு ஒரு குடும்பம் இருக்கு.

அதேபோல், திரிஷா தங்கச்சி மீது ஏன் இவ்வளவு வன்மத்தை கொட்டி தீர்க்கின்றீர்கள் என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார் கூல் சுரேஷ்.

Advertisement

Advertisement