• May 02 2024

ரிலீஸ் திகதியை அறிவித்தும் ப்ரமோஷன் எதுவும் செய்யாமல் இருப்பது ஏன்- லத்தி படத்தால் கடும் குழப்பத்தில் இருக்கும் நெட்டிசன்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் செல்லமே என்னும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகியவர் தான் விஷால். இப்படத்தில் கிடைத்த வரவெற்பைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்திருந்தார். அந்த வகையில் இவர் நடிப்பில் வெளியாகிய சண்டைக்கோழி திமிரு பூஜை போன்ற இன்னும் பல திரைப்படங்கள் இவருக்கு சிறந்த அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

அந்த வகையில் இவர் நடிப்பில் இறுதியாக  ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி ’வீரமே வாகை சூடும்’ என்னும் திரைப்படம் வெளியாகியிருந்தது.கடும் எதிர்பார்ப்பில் வெளியாகிய இப்பபடம் ரசிகர்களிடையெ வெற்றி பெறவில்லை என்று தான் கூற வேண்டும்.


அதையடுத்து விஷாலின் அடுத்த படமாக லத்தி என்ற படத்தில் நடித்துமுடித்துள்ளார். சில தினங்களுக்கு முன்னர் படத்தில் இருந்து ஒரு துணுக்குக் காட்சியைப் படக்குழு வெளியிட்டது. அதன் பின்னர் சென்னையில் படத்தின் டீசர் ரிலீஸ் நிகழ்ச்சி நடந்தது. இந்த படத்தை விஷாலின் நண்பர்களான ராணா மற்றும் நந்தா ஆகியோர் தயாரித்துள்ளனர்.

இந்த படம் செப்டம்பர் 15 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் இப்போது வரை எந்த ஒரு ப்ரொமோஷனையும் படக்குழு செய்யவில்லை. அதனால் அந்த தேதியில் லத்தி திரைப்படம் ரிலீஸ் ஆவது சந்தேகம்தான் என கூறப்பட்டு வருவதைக் காணலாம்.

Advertisement

Advertisement

Advertisement