• May 18 2024

சூர்யாவுக்கு எதற்கு தேசிய விருது ?'.. வீடியோ ஆதாரத்துடன் திட்டி தீர்க்கும் நெட்டிசன்கள்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம், ஹிந்தி என ஐந்து மொழிகளிலும் ஜூன் 1ந் தேதி பான் இந்தியத் திரைப்படமாக வெளியாகியது தான் ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட். இப்படத்தை நடிகர் மாதவனே இயக்கி நடித்துள்ளார்.

இஸ்ரோவின் முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை வரலாற்றை இத்திரைப்படம் விவரித்துள்ளது. இப்படத்தில் 80 வயதான நம்பி நாராயணனாக மாதவன் நடித்துள்ளதோடு இப்படம் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.நடிகர் ஷாருக்கான் மற்றும் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி, முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த சிம்ரன், ஜெகன் முதல் கேமியோ ரோலில் நடித்த சூர்யா, ஷாருக்கான் வரை அனைவரது நடிப்பும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், ராக்கெட்ரி படத்தில் சூர்யா நடித்த சீனை வைத்து கடுமையான விமர்சனங்கள் இணையத்தில் உலாவ தொடங்கி உள்ளது. நம்பி நாராயணன், சட்ட ரீதியாக போராடி, தனது மீது சுமத்தப்பட்ட தேச துரோகி என்னும் பட்டம் முதல் அனைத்து குற்றச்சாட்டுகளும் பொய் என நிரூபித்தார். மேலும் அப்படிப்பட்ட தேச பக்தி மிக்க ஒரு நிகழ்கால மனிதரின் வாழ்க்கையில் ஏற்பட்ட சம்பவங்களை வைத்து, எடுக்கப்பட்ட படம், ராக்கெட்ரி.

அத்தோடு இப் படத்தில், நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் வரும் மாதவன், பேட்டி தரும் காட்சி முடிந்ததும், நம்பி நாராயணன், ‘ஜெய் ஹிந்த்’ என்று கூறி முடிப்பார். இந்தி மொழியில் பேட்டி எடுத்த நடிகர் ஷாருக்கானும் பதிலுக்கு, ‘ஜெய் ஹிந்த்’ என கூறுவார். தமிழ் மொழியில், நடிகர் சூர்யா பேட்டி எடுப்பார். ஆனால், அவர் ‘ஜெய் ஹிந்த்’ என கூறியதாக காட்டப்படவில்லை.

எனினும் இது குறித்து பல விமர்சனங்கள் அடுத்தடுத்து சமூக வலைத்தளங்களில் முன்வைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே இந்த விவகாரம் குறித்து காயத்ரி ரகுராம் பேசி இருந்தார். சூர்யா மீது காயத்ரி வைத்த விமர்சனம் நெட்டிசன்கள் மத்தியிலும் பரவத் துவங்கி இருக்கிறது.

சமீபத்தில், சூர்யாவிற்கு சூரரை போற்று படத்திற்காக சிறந்த நடிகர் சூரரை தேசிய விருது அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு பலரும் பாராட்டி வாழ்த்து தெரிவித்து வந்தனர். இதற்கு சூர்யாவும் நன்றி தெரிவித்து உருக்கமான அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.அத்தோடு இப்படி ஒரு நிலையில், ‘ராக்கெட்ரி’ படத்தில் சூர்யா ஜெய் ஹிந்த் சொல்லாததை குறிப்பிட்டு நெட்டிசன்கள் சிலர் ‘ஜெய் ஹிந்த் சொல்லாத சூர்யாவிற்கு எதற்கு தேசிய விருது ?’ என்றெல்லாம் விமர்சித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement