• May 18 2024

என்னம்மா பிரியங்கா..? இப்படியொரு கோலம்-வீடியோவை பார்த்து வாயடைத்துப்போன ரசிகர்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சி தொகுப்பாளர்கள் என்றாலே சிறியோர்கள் முதல் பெரியோர்கள் வரை அனைவருக்கும் முதலில் ஞாபகத்திற்கு வருபவர் தொகுப்பாளினி பிரியங்கா தான். தனது கலகலப்பான பேச்சினாலும், சத்தமான சிரிப்பினாலும் ஏராளமான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்டவர்.

இந்நிலையில் இவர் மகாபா ஆனந்துடன் இணைந்து வழங்கும் “சூப்பர் சிங்கர்” என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அதிகளவில் பிரபலமாகி இருக்கின்றார். இவரை யாராவது கோபமாகத் திட்டினாலும் சரி, வெறுப்பாக ஏசினாலும் சரி அது எதையுமே பொருட்படுத்தாமல் அதை ஜாலியாக எடுத்துக் கொண்டு எப்போதும் கலகலப்பாக நிகழ்ச்சியைக் கொண்டு நடத்துவார்.

தொகுப்பாளினி பிரியங்கா விஜய் டீவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 5 இலும் போட்டியாளராகப் பங்குபற்றியிருந்தார். இதனைத் தொடர்ந்து பல விமர்சனங்களுக்கும் உள்ளாகி இருந்தார்..

இவ்வாறுஇருக்கையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கும் பிரியங்கா, அடிக்கடி புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை பதிவு செய்வார்.

மேலும் அந்த வகையில் நாட்டாமை கெட்டப்பில் மாறிய வீடியோவை தனது இன்ஸ்டாவில் பதிவு செய்துள்ளார்.

இந்த கெட்டப் இந்த வாரம் ஒளிபரப்பாக இருக்கும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சிக்காக போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement