• Jan 19 2025

ஏன்டா தங்கத்துல மாலை கட்டினியா? தலைவர் கொடுத்த வார்னிங்!சாம்பலாகும் 500 மாலைகள்! மீனா எடுத்த முடிவு

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய நாளுக்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என பார்ப்போம்.

அதில் பார்வதி, உனக்கு நல்ல குடும்பம் கிடைச்சு இருக்கு, எல்லாரையும் ஒரே மாதிரி பார்த்தா எல்லாரும் நல்லா இருக்கலாம். இருக்கும் போது அவங்க அருமை தெரியாது என ரொம்பவும் பீல் பண்ணி கதைக்கிறார். அதற்கு விஜயா உனக்கு இன்னொரு குல்ஃபீ வேணும்னா கேட்டு வாங்கு  என பேசிவிட்டு போகிறார்.

இதை தொடர்ந்து மீனா மாலை எல்லாம் கட்டி முடிச்சு வண்டியில் ஏற்றிக் கொள்கிறார்கள். கட்டிய மாலையுடன் போட்டோ எடுத்துக் கொள்கிறார். டிரைவர் நீண்ட நேரமாக போன் பேசிக் கொண்டு இருக்க, அவரை தட்டி சரியாக கொண்டு போய் சேர்க்குமாறு சொல்கிறார். இவர்களுக்கு பின்னால் சிட்டியின் ஆட்கள் வண்டியை பின்தொடருகிறார்கள்.

இதையடுத்து, வண்டி செல்லும்போது டயர் பெட்ச் என ஒருவர் சொல்ல, வண்டியில் இருந்த டிரைவர் போன் பேசியவாறே இறங்கி பார்க்க, முன்னாள் வண்டியை சிட்டியின் ஆட்கள் தூக்கிச் செல்கிறார்கள்.


அதன்பின், முத்துவுக்கு இன்னும் மாலை வரல என்று அவரின் நண்பர் சொல்ல, அப்பவே கொடுத்துட்டோம் வந்து கொண்டு இருக்கும் என சொல்லி விட்டு, வண்டி டிரைவ்க்கு போன் போட அவர் மாலையுடன் வண்டி காணாமல் போன விஷயத்தை சொல்லுகிறார்.

மறுப்பக்கம் சிட்டி தனது ஆட்களிடம் அந்த மாலைகளை குப்பையில் போட்டு எரிக்குமாறு சொல்கிறார்.

முத்துவும் மீனாவும் ஆட்டோவில் வண்டியை தேடி அழைகிறார்கள். இதன் போது தலைவர் போன் போட்டு எங்கடா மாலை,இன்னும் கொஞ்ச நேரத்துல மாலையெல்லாம் இங்க வரணும் என வார்னிங் கொடுக்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.

Advertisement

Advertisement