• Jan 19 2025

நீங்க பதட்ட படாதீங்க ஈஸ்வரி.. பாக்கியாவுக்கு எதிராக கடை போடும் கோபி! ராதிகா கடும் ஆள் தான்

Aathira / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் இன்று என்ன நடக்கும் என்பதற்கான எபிசோட்  வெளியாகி உள்ளது. அதில் என்ன நடக்குது என்று பார்ப்போம்.

அதில், ஈஸ்வரி, பாக்கியா, செல்வி, இனியா எல்லாரும் கிச்சனில் இருக்க, வெளியில் ராதிகா கோபியை முறைத்து பார்த்துவிட்டு போவதை ஈஸ்வரி கவனிக்கிறார். இனியாவும் அவங்களுக்கு உள்ள சண்டை என சொல்கிறார்.

இதையடுத்து ராதிகா கிச்சனுக்கு வர, ஏன் கோபி கூட சண்டை பிடிக்கிறா என ஈஸ்வரி கேட்க, நீங்க மாமா கூட போடுற அளவுக்கு இல்லை.வீட்டுக்கு பெரியவங்க நீங்க உங்கள தானே உதாரணமா எடுக்கணும் என சொல்ல, நான் சண்ட போடுறதும் நீ சண்டை போடுறதும் ஒன்டா. கோபி ஹார்ட் பேஷன் என சொல்கிறார். அதற்கு ராதிகா உங்கள சொல்லணும் உங்க வளர்ப்பு தான் சரி இல்லை, உங்க பையன நான் சரி பண்ணுறன் என சொல்லி செல்கிறார். 


மறுப்பக்கம் பாக்கியா ரெஸ்டாரண்டில் போதிய ஆட்கள் வராமையால் சாப்பாடுகள் மிஞ்சுகிறது. அதை சிறுவர் இல்லத்துக்கு கொடுக்குமாறு சொல்கிறார். இனி சாப்பாட்டை குறைத்து செய்யுமாறும் சொல்கிறார்.

அதன்பின் வீட்டுக்கு வந்து ஈஸ்வரி, ராமமூர்த்திக்கு மாத்திரை கொடுத்து விட்டு, செழியனுக்கும் சாப்பாடு கொடுக்கிறார்.

கோபி ராதிகாவிடம் தனது புது ஐடியாவை சொல்கிறார். அதாவது, கிளவுட் கிச்சன் என்ற பிசினஸ் தொடங்க போவதாகவும், அதற்கு சின்ன இடம் இருந்தா போதும் எனவும் தனது ஐடியாவை சொல்கிறார். ஓடர் எடுப்பதற்கு பெரிய பெரிய கம்பெனி கிட்ட கதைத்து உள்ளதாகவும் சொல்கிறார். அதற்கு ராதிகா சரி என சொல்ல, இப்படி ஒரு பொண்டாட்டி கிடைக்க கொடுத்து வச்சி இருக்கணும் என சந்தோசப்படுகிறார்.

அதன்பின், எல்லோரையும் அழைத்து தனது அம்மா, அப்பாவிடம் கிளவுட் கிச்சன் ஆரம்பிப்பது பற்றி சொல்கிறார். இது தான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement