• May 03 2024

சும்மா கத்துறது மட்டுமே நடிப்பு என்று யார் சொல்லிக் கொடுத்தது- மார்க் ஆண்டனி படம் குறித்து பயில்வான் ரங்கநாதன் சொன்ன விமர்சனம்

stella / 7 months ago

Advertisement

Listen News!

விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா நடிப்பில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் மார்க் ஆண்டனி.ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இந்தப் படம் டைம் ட்ராவலை மையமாக கொண்டு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. 

இரும்புத்திரை படத்தை தொடர்ந்து 7 படங்கள் விஷாலுக்கு சரியாக அமையாத நிலையில், தற்போது மார்க் ஆண்டனி படம் சிறப்பாக கைகொடுத்துள்ளது.இந்த நிலையில் மார்க் ஆண்டனி படத்தைப் பார்த்த பயில்வான் ரங்கநாதன் கூறியிருப்பதாவது,


மார்க் ஆண்டனி திரைப்படத்தில் நடிகர் விஷால் நல்ல நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார் என்றும் எஸ் ஜே சூர்யா பல பழைய வில்லன்களை மிக்ஸ் செய்து ஒரு புதிய நடிப்பை கொடுத்துள்ளார் என்றும் கூறியுள்ளார். சில இடங்களில் விஷால் நல்லா நடித்திருப்பது போல தெரிகிறது. சில இடங்களில் எஸ் ஜே சூர்யாவின் நடிப்பு மிரட்டுகிறது.

 ஆனால், சும்மா கத்துறது மட்டுமே நடிப்பு என எஸ் ஜே சூர்யாவுக்கு யார்தான் சொல்லிக் கொடுத்தார் என தெரியவில்லை. எஸ் ஏ சூர்யாவின் நடிப்பு யதார்த்தமாக இல்லாமல் செயற்கைத்தனமாக இருப்பதாகவே தோன்றுகிறது. மேலும் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்த பாடல்கள் கேட்கும்படி இருந்தாலும் பின்னணி இசை காதை கிழிக்கிறது. பின்னணி இசையில் ஜிவி பிரகாஷ் கோட்டை விட்டுவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும் என கடுமையாக விமர்சித்துள்ளார் பயில்வான் ரங்கநாதன்.


ஹீரோயின் ஒரு பக்கம் விஷாலை காதலிக்கிறார். கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்தா எஸ் ஜே சூர்யாவை காதலிக்கிறார். விஷாலை காதலிக்கும் போது எஸ் ஜே சூர்யா டென்ஷன் ஆகிறார். எஸ் ஜே சூர்யாவை காதலிக்கும் போது விஷால் டென்ஷன் ஆகிறார் இப்படி மாத்தி மாத்தி காதல் காட்சிகளை அமைத்ததை பார்த்து ரசிகர்கள் தான் டென்ஷன் ஆகின்றனர்.


 விஷாலுக்கு பல வருடங்கள் கழித்து ஒரு நல்ல படத்தை கொடுத்துள்ளார் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் என்று தான் சொல்ல வேண்டும். படத்தில் சில குறைகள் இருந்தாலும் ரசிகர்களுக்கு ஒட்டுமொத்தமாக ஒரு பக்காவான என்டர்டைன்மென்ட் படத்தை கொடுக்க வேண்டும் என்கிற முயற்சி மார்க் ஆண்டனி படத்திற்கு நன்றாகவே கை கொடுத்துள்ளது. கண்டிப்பாக இந்த வாரம், தியேட்டருக்கு சென்று ஜாலியாக இந்த படத்தை பார்த்துவிட்டு வரலாம் என கூறியுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement