விஜய் டிவியில் ரசிகர்களைக் கவரும் விதமாக பல சீரியல்கள் ஓக் கொண்டிருக்கின்றன. அந்த வகையில் இதில் ஹிட்டாக ஓடி முடிவடைந்த சீரியல் தான் பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் கண்ணம்மா என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபல்யமானவர் தான் நடிகை ரோஷிணி ஹரிப்ரியன்.
இந்த சீரியல் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் போதே தவிர்க்க முடியாத சில காரணங்களால் இவர் இந்த சீரியலை விட்டு விலகினார். அதற்கு பிறகு அவர் வேறு புது சீரியல்களில் நடிக்கவில்லை, ஆனால் குக் வித் கோமாளி போன்ற ஷோக்களில் மட்டும் கலந்துகொண்டு வந்தார்.
இந்த நிலையில் இவர் பற்றிய ஒரு தகவல் வைரலாகி வருகின்றது. அதாவது சூர்யா நடிப்பில் வெளியான ஜெய் பீம் படத்தில் செங்கேனி கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் ஞானவேல் முதலில் ரோஷ்ணியை தான் அணுகினாராம், ஆனால் பாரதி கண்ணம்மா காரணமாக அவர் அதில் நடிக்க முடியாமல் போய்விட்டதாம்.
அந்த படத்தில் நடித்து இருந்தால் ரோஷிணி கெரியரில் இன்னும் பெரிய உயரத்தில் இருந்திருப்பார் என ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். அத்தோடு இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!