தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோவாக விளங்குபவர் தான் நடிகர் அஜித் . இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனை அடுத்து இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக சில மாதங்களுக்கு முதல் தகவல் வெளியாகியிருந்தது.
ஆனாலும் ஷூட்டிங் தொடங்காமல் இருந்ததால் படம் ட்ராப் ஆகிவிட்டது, தயாரிப்பாளர் மாற்றம் என்றெல்லாம் வதந்திகள் பரவ தொடங்கிவிட்டது.ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை என லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் தெளிவு படுத்திவிட்டார்.மேலும் இப்படத்தில் கதாநாயகியாக நடிக்க நடிகை தமன்னா கமிட்டாகியுள்ளாராம்.
இந்நிலையில் தற்போது வில்லன் யார் என்கிற தகவல் வந்திருக்கிறது.ஹிந்தி நடிகர் சஞ்சய் தத் தான் அஜித்துக்கு வில்லனாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி இருக்கிறாராம். சஞ்சய் தத் சமீபத்தில் தான் விஜய்யின் லியோ படத்தில் வில்லனாக நடித்து முடித்திருக்கிறார். அடுத்து அவர் அஜித்துக்கு வில்லனாக நடிப்பதால் தற்போது தமிழ் சினிமாவில் மெயின் வில்லன் அவர் தான் என்ற நிலை வந்திருக்கிறது.
மேலும் அஜித் அண்மையில் சைக்கிலிங் செய்த புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களைக் கவர்ந்திருந்தது. அத்தோடு விரைவில் இப்படத்தின் ஷுட்டிங் ஆரம்பமாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது
Listen News!