• May 05 2024

ஆடையே அணியாமல் வெறும் ரோஜா மலரால் மறைந்து காதலை சொன்ன தர்ஷா குப்தா- ஷாக்கான ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!


கோயம்புத்தூரைச் சேர்ந்த கவர்ச்சி தேவதையான தர்ஷா குப்தா, சின்னத்திரை மூலம் தன்னுடைய நடிப்பை ஆரம்பித்தார்.அந்த வகையில் ஷு தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் என்னும் சீரியல் மூலம் அறிமுகமாகினார். தொடர்ந்து விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'செந்தூரப்பூவே' சீரியலில் நெகடிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.


இதைத்தொடர்ந்து தன்னுடைய சமையல் திறமையை வெளிக்காட்டும் விதமாக 'குக் வித் கோமாளி சீசன் 2' நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு கலக்கினார். இந்த நிகழ்ச்சியில், இவர் புகழுடன் சேர்ந்து செய்த அலப்பறை குக் வித் கோமாளி நிகழ்ச்சி செட்டையே கலகலப்பாக மாற்றியது.


மேலும் பைனல் வரை செல்வார் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், சமையலில் செய்த சிறு சிறு தவறுகளால் பைனலில் பங்கேற்க முடியாமல் போனது. அதே போல் லாக் டவுன் சமயத்தில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு ரசிகர்களை உசுப்பேற்றி வந்த தர்ஷா குப்தாவுக்கு, இதன் மூலம்  திரைப்படங்களில் நடிக்கவும் வாய்ப்பு கிடைத்தது.


இயக்குநர் மோகன் ஜி இயக்கிய 'ருத்ர தாண்டவம்' படத்தில் ரிச்சர்டுக்கு ஜோடியாக நடித்த தர்ஷா குப்தா, இந்த படத்தை தொடர்ந்து... கடந்தாண்டு சன்னி லியோன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்த, 'ஓ மை கோஸ்ட்' என்கிற படத்திலும், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். குறிப்பாக இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவில், சன்னி லியோனையே மிஞ்சும் அளவிற்கு கவர்ச்சி உடையில் வந்து ரசிகர்களை திணறடித்தார்.


தற்போது ஒரு சில படங்களில் நடித்து வரும் தர்ஷா குப்தா, அடிக்கடி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் காதலர் தினத்தை முன்னிட்டு, இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் பலரையும் வியக்க வைத்துள்ளது.


மேலாடை போடாமல் ரோஜா மலர்களால் தன்னுடைய முன்னழகை மறைத்துக்கொண்டு புகைப்படம் வெளியிட்டுள்ளது மட்டுமின்றி, என் காதலை ஏற்க யார் தயார் என்று கேள்வியும் எழுப்பி உள்ளார்? இதற்கு ஒரு தரப்பு ரசிகர்கள் வழக்கம் போல் பாசிட்டிவான விமர்சனங்களையும், மற்றொரு தரப்பினர் நெகட்டிவ் விமர்சனங்களையும் கொடுத்து வருகின்றனர். மேலும் இந்த புகைப்படமும் சமூக வலைதளத்தில் தாறுமாறாக வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement