• Apr 19 2026

திருமணம் எப்போது.? ரசிகர்களுக்கு நேரடி பதில் கூறிய சாய் பல்லவியின் முடிவு இது தானா.?

Aathira / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம் மட்டுமல்லாமல் இந்தி திரைப்படங்களிலும் பிஸியாக நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. இவர் பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கதாபாத்திரம் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த நடிகையாக மாறினார்.

இயல்பான நடிப்பும், எளிமையான தன்மையும் காரணமாக தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ள இவர், ரசிகர்களின் பிரியமான நடிகையாக திகழ்ந்து வருகிறார்.

தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் சீதாராம் திரைப்படத்தில் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் நிலையில், அண்மையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டு பேசிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


குறித்த நிகழ்ச்சியில்,  நடிகை சாய் பல்லவியிடம் ''திருமணம் எப்போது?” என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு சாய் பல்லவி, “இப்போதைக்கு திருமணம் செய்யும் எண்ணமே இல்லை. என் கவனம் முழுவதும் சினிமாவில்தான் இருக்கிறது ” என்று தெளிவாக பதிலளித்தார்.  

இந்த பதில் ரசிகர்களிடையே பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. சினிமா வாழ்க்கையில் முழு கவனம் செலுத்த விரும்பும் சாய் பல்லவி, திருமணம் குறித்து அவசரப்படவில்லை என்பதும் இதன் மூலம் தெளிவாகியுள்ளது. 

சிலர் அவரது முடிவை பாராட்டியுள்ள நிலையில், இன்னும் சிலர் அவரின் திருமணத்தை எதிர்பார்த்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement