தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் பல்வேறு படங்களிலும், தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் ப்ரித்விராஜ். 1990ல் இருந்து இவர் தொடர்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.2000களில், ரமணி வெர்சஸ் ரமணி சீரியல்களிலும், நாகா இயக்கிய மர்ம தேசம் என்ற த்ரில்லரிலும் அவர் முக்கிய வேடங்களில் நடித்தார்.
அவர் கடைசியாச சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்த கண்ணான கண்ணே என்ற தொடரில் அப்பா வேடத்தில் சிறப்பாக நடித்து வந்தார், தொடரும் இப்போது முடிந்துவிட்டது.இவர் சமீபத்தில் 23 வயதே ஆன ஷீட்டல் என்ற இளம் பெண்ணை மறுமணம் செய்தார்.
படங்கள், சீரியல்கள் என தொடர்ந்து நடிக்கும் பப்லுவிடம் கிட்டத்தட்ட ரூ. 5 கோடி வரை சொத்துக்கள் இருப்பதாக கூறப்படுகிறது. சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அவ்வப்போது தங்களுடைய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களையும் பதிவிட்டு வருவார்.
அந்த வகையில் தற்பொழுது நீண்ட நாளுக்குப் பிறகு இணைந்து ரீல்ஸ் செய்து வீடியோ வெளியிட்டுள்ளனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!