• May 18 2024

முதன்முறையாக நடுவர்களையே மெய்சிலிர்க்க வைத்த போட்டியாளர்- Kathanayagi ரியாலிட்ரி ஷோவின் பரபரப்பான Promo

stella / 9 months ago

Advertisement

Listen News!

தகுதியான பெண் கதாநாயகியை தொலைக்காட்சித் துறைக்கு அறிமுகப்படுத்தும் வகையில், விஜய் டிவியில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள ரியாலிட்ரி ஷோ தான் கதாநாயகி. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 9.30 மணிக்கு  இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த ஷோவில் நடுவராக ராதிகா சரத்குமார் மற்றும் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் ஆகியோர் இருக்கின்றனர். அத்தோடு இந்த நிகழ்ச்சியை குரேஷியுடன் இணைந்து ப்ரியங்கா தொகுத்து வழங்கி வருகின்றனர்.


இந்த நிகழ்ச்சியில் ஷாலினி என்னும் முக்கிய போட்டியாளர் பங்குபற்றி வருகின்றார்.இவர் திருமணம் முடித்திருந்தாலும் தன்னுடைய கணவருடைய சர்ப்போட்டின் காரணமாக இந்த நிகழ்ச்சியில் பங்கு பற்றியதோடு ரசிகர்களின் ஆதரவையும் பெற்று வருகின்றார்.

இநந்த நிலையில் தற்பொழுது இந்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது. அதில் ஷாலினி முதன் முறையாக நடுவர்களிடமிருந்து 5 மதிப் பெண்களையும் பெற்று பாராட்டையும் பெற்றுள்ளார். இவருடன் இந்த வாரம் நடிப்பதற்கு செல்லம்மா சீரியல் கதாநாயகியும் இணைந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement