• Oct 16 2024

என்ன புது கதையா இருக்கு...சந்திரமுகி 2 இல் கங்கனாவுக்கு பதில் முதலில் நடிக்கவிருந்தது இந்த நடிகையா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை சாய் பல்லவி தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார். பிரேமம் படம் மூலம் நடிகையாக அறிமுகமான இவர், ஒரு மருத்துவர் என்பது தெரிந்த விஷயம்தான். நடனத்திலும் சிறப்பாக காணப்படும் இவர் தொடர்ந்து, அடுத்தடுத்த சிறப்பான படங்களில் நடித்து வருகிறார். 

தற்போது சிவகார்த்திகேயனுடன் எஸ்கே21 படத்தில் இணைந்து நடித்து வருகிறார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் சூட்டிங் ஏறக்குறைய இரண்டு மாதங்கள் காஷ்மீரில் நடந்து முடிந்துள்ளது.அடுத்தக்கட்ட சூட்டிங் சென்னையில் இன்னும் சில தினங்களில் துவங்கவுள்ளது. 


இந்நிலையில் வரும் விநாயகர் சதுர்த்தியையொட்டி ரிலீசாகவுள்ள சந்திரமுகி 2 படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை சாய் பல்லவி முன்னதாக தவறவிட்டது குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 


தற்போது கங்கணா ரனாவத் நடித்துள்ள சந்திரமுகி ரோலில்தான் சாய் பல்லவி நடிக்கவிருந்ததாக கூறப்பட்டுள்ளது. இந்த கேரக்டருக்காக இயக்குநர் பி வாசு சாய் பல்லவியை அணுகியபோது, கதையை கேட்டு உடனடியாக ஓகே சொல்லியுள்ளார் சாய் பல்லவி.


ஆனாலும் க்ளைமாக்ஸ் காட்சிகளில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்று பி வாசுவிடம் இவர் கேட்டுள்ளாராம். இதனால் கடுப்பான பி வாசு, கதையில் எந்தவிதமான மாற்றத்தையும் செய்ய முடியாது என்று கூறிவிட்டாராம். இதனால்தான் இந்தப் படத்தில் சாய் பல்லவி நடிக்க முடியாமல் போயுள்ளது. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகின்றது.

Advertisement