• May 02 2024

'ஏதாவது சீரிஸ் பார்க்க வேண்டும் என்றால் எதனை பரிந்துரை செய்வீர்கள்'- பிரபல எம்.பியிடம் கேட்ட மாளவிகா மோகனன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் மிகவும் முக்கியமானவர் தான் மாளவிகா மோகனன். இவர் பேட்ட திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் பிரபல்யமானவர்.

அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படத்திலும் தனுஷ் நடிப்பில் வெளியான மாறன் திரைப்படத்திலும் நடித்திருந்தார். இவற்றைத் தொடர்ந்து நல்ல படவாய்ப்புக்காக காத்திருக்கின்றார்.

இந்த நிலையில் சிவகங்கை தொகுதி காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்தின் ஆடிட்டர் பாஸ்கரன் ராமன் என்பவர் திடீரென சிபிஐ அதிகாரிகளால் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அவர் இப்போது டுவிட்டரில் நடிகை மாளவிகா மோகனின் டுவிட்டுக்கு பதிலளித்தது வைரலாகியுள்ளது. அதாவது மாளவிகா தன்னுடைய டுவிட்டில் “ஏதாவது புதிய படம் அல்லது சீரிஸ் பார்க்கலாமென்றால் என்ன பரிந்துரை செய்வீர்கள்” எனக் கேட்டுள்ளார்.

அதற்கு கார்த்தி சிதம்பரம் . “Inventing Anna” என்ற சீரிஸை பரிந்துரை செய்துள்ளார். அவரின் இந்த கமெண்ட் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement