• May 07 2024

புதிய போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் பா.ரஞ்சித்- அட இது என்ன புது படமாக இருக்கு

stella / 1 year ago

Advertisement

Listen News!

கடந்த 2012 இல் நடிகர் தினேஷ் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் அட்டகத்தி. இப்படத்தை இயக்கியவர்தான் இயக்குநர் பா.ரஞ்சித். இவர் ஆரம்பத்தில் இயக்குநர் வெங்கட் பிரபுவிடம் உதவிப்பணியாளராக பணியாற்றினார்.

இதைத்தொடர்ந்து நடிகர் கார்த்திக் நடிப்பில் மெட்ராஸ் படத்தை இயக்கி நல்ல வரவேற்பை பெற்றார். இதைத்தொடர்ந்து சூப்பர் ஸ்டார் ரஜனி காந்த் நடிப்பில் கபாலி, பரியேறும் பெருமாள், காலா, சார்பட்டா பரம்பரை போன்ற வெற்றிப்படங்களை திரையுலகிற்கு கொடுத்தார்.

மேலும் நோர்வே தமிழ்த் திரைப்பட விழா விருதுகள், தென்னிந்திய சர்வதேசத் திரைப்பட விருதுகள், தென்னிந்திய பிலிம்பேர் விருதுகள்போன்றவற்றை பெற்று முன்னணி இயக்குநராக வலம்வருகின்றார்.

இதனைத்தொடர்ந்து, சத்தமில்லாமல் "நட்ச்சத்திரம் நகர்கிறது". படத்தை இயக்கி முடித்துள்ளார் பா.ரஞ்சித். இதனை தனது பேட்டிகளிலும் ஏற்கெனவே உறுதிப்படுத்தியிருந்தார். இப்படத்தில் துஷாரா விஜயன், அசோக் செல்வன், காளிதாஸ் ஜெயராம், ஆகியோர் நடித்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து,நடிகர் ஷியான் விக்ரம் நடிக்கும் 61 படத்தை இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் இயக்குநர் ப.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' என்ற புதிய படத்தை எழுதி இயக்கவுள்ளார். இப்படத்தை கோல்டன் ரேஷியோ பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் உலக புகழ் பெற்ற கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement