• Oct 16 2024

எழிலிடம் கயல் சொல்ல வந்த விடயம்... காதலை சொல்ல வருகிறார் என தப்பாக நினைத்து சந்தோசப்படும் எழில்.. இனி நிகழப் போவது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும்  பிரபல ஹிட் சீரியல்களில் ஒன்று 'கயல்'. இந்த சீரியலானது டிஆர்பி ரேட்டிங்கில் முதன்மையான ஒரு தனி இடத்தைப் பிடித்திருக்கின்றது. இந்த சீரியலில் அடுத்து என்ன நடக்கவுள்ளது என்பது குறித்து அறியப் பலரும் ஆவலாக உள்ளனர்.


இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி இருக்கின்றது. அதில் கயல் ஒரு கிப்ட் பாக்ஸை கொண்டு எழிலுக்கு கொடுக்கப் போகின்றார். எழிலிடம் சென்ற கயல் "சொல்ல ஒரு மாதிரியாய் தான் இருக்கு, இருந்தாலும் சொல்ல வேண்டிய சூழ்நிலை" என வெட்கப்பட்டுக்கிட்டே கூறுகின்றார்.


பதிலுக்கு கதிரும் ரொம்பவே எதிர்பார்ப்புடன் கயல் தன்னிடம் காதலை சொல்ல வருகின்றார் என நினைத்து சந்தோசப்படுகின்றார். ஆனால் கயல் எழிலுக்கு திருமண வாழ்த்துக் கூற தான் வந்திருக்கிறார் போல தெரிகிறது. ஆகவே என்ன நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 


Advertisement