• Sep 27 2023

தமிழ் சினிமாவின் பிரபல நடிகை கைது.. 6மாத கால சிறைத் தண்டனை விதிப்பு... அதிர்ச்சியில் திரையுலகம்..!

Prema / 1 month ago

Advertisement

Listen News!

பாலசந்தரின் 'மன்மத லீலை' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ஜெயப்பிரதா. இவர் தமிழில் மட்டுமன்றி ஹிந்தியிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

அந்தவகையில் தமிழில் 'நினைத்தாலே இனிக்கும், 47 நாட்கள், ஏழை ஜாதி' போன்ற படங்களில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


சினிமாவைத் தொடர்ந்து அரசியலிலும் கால் பதித்த இவர் அதிலும் ஜொலித்து வந்தார். அதாவது 2004 முதல் 2014 வரை உத்தர பிரதேச மாநிலத்தின் ராம்பூர் தொகுதியில் எம்.பியாக பணியாற்றினார். அத்தோடு 2019ல் பாரத ஜனதா கட்சியில் இணைந்தார்.

மேலும் இவர் சென்னையில் ஜெயப்பிரதா தியேட்டர் காம்ப்ளெக்ஸ் ஒன்றினை நடத்தி வந்துள்ளார். இவ்வாறாக தான் சொந்தமாக நடத்தி வந்த திரையரங்கில், பணிபுரிந்த தொழிலாளர்களுக்கான இ.எஸ்.ஐ தொகையை அரசு காப்பீட்டு கழகத்தில் செலுத்தவில்லை என ஜெயப்பிரதா மீது புகார் அளிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து இவர் மீது எழும்பூர் நீதிமன்றத்தில் தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகம் வழக்கு ஒன்றினைத் தொடர்ந்தது. குறித்த வழக்கையடுத்து ஜெயப்பிரதா உள்ளிட்ட 3 பேர் இணைந்து உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

இந்நிலையில் இந்த வழக்குத் தள்ளுபடியானது, அதுமட்டுமல்லாது நடிகை ஜெயப்பிரதாக்கு 6 மாத சிறை தண்டனையும் விதித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த விடயமானது திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement

Advertisement