• Jul 28 2026

ஸ்டாலின் கையில் 'குக்கர்'.! அடுத்தடுத்து கிளம்பும் அரசியல் கேள்விகள்..

shali / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளையும் சமூக அக்கறை கொண்ட படைப்புகளையும் வழங்கி வரும் இயக்குநர் கரு. பழனியப்பன், தற்போது நடிகர் காளி வெங்கட் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தை இயக்கி வருகிறார். 

கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான பார்த்திபன் கனவு திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான கரு. பழனியப்பன், தனது முதல் படத்திலேயே தமிழக அரசின் சிறந்த அறிமுக இயக்குநர் விருதைப் பெற்றார். தொடர்ந்து சிவப்பதிகாரம், பிரிவோம் சந்திப்போம் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.


இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் தனது திறமையை வெளிப்படுத்திய அவர், நட்பே துணை மற்றும் யாதும் ஊரே யாவரும் கேளிர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த புதிய படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு தற்போது தேனியில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், படத்தின் தலைப்பு இன்று அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கரு. பழனியப்பன் இயக்கும் இந்த திரைப்படத்திற்கு “குக்கர்” என்ற தலைப்பை வெளியிட்டார். இந்த நிகழ்வில் காளி வெங்கட் மற்றும் ஒளிப்பதிவாளர் ராஜசேகரன் ஆகியோரும் கலந்துகொண்டனர். தலைப்பு வெளியீட்டின் மூலம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மேலும் அதிகரித்துள்ளது.

Advertisement

Advertisement