• Aug 17 2026

'விஸ்வநாத் அன் சன்ஸ்' பட முதல் சிங்கிளை பாடியது யார் தெரியுமா? சஸ்பென்ஸ் வைத்த G. V.

shali / 2 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சூர்யா நடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் வெங்கி அட்லூரி  இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள 46-வது திரைப்படமான ''விஸ்வநாத் அன் சன்ஸ்' மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்தப் படத்தில் கதாநாயகியாக மமிதா பைஜூ நடித்துள்ளதுடன், ராதிகா சரத்குமார் மற்றும் ரவீனா தாண்டன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் G. V.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ள இப்படம் ஆகஸ்ட் 14-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.


படத்தின் முதல் பாடல் ஜூன் 17-ஆம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு வெளியிடப்பட்டுள்ள ப்ரோமோ வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வீடியோவில் ஜி.வி. பிரகாஷ், முதல் சிங்கிளுக்கான பாடகரை இன்னும் தேர்வு செய்யவில்லை என இயக்குநர் வெங்கி அட்லூரியிடம் தெரிவிக்கிறார். அதற்கு பதிலாக சரியான நபரை ஸ்டுடியோவுக்கு அனுப்புவதாக இயக்குநர் கூறுகிறார்.

இதையடுத்து ஸ்டுடியோவிற்கு வரும் மமிதா பைஜூவை பார்த்த ஜி.வி. பிரகாஷ், அவரே பாடலைப் பாட வருவதாக நினைக்கிறார். ஆனால் மமிதா, பாடுவதற்காக அல்லாமல் பாடலுக்கு நடனமாடுவதற்காக மட்டுமே வந்துள்ளதாகவும், அதுவே தனது பலம் என்றும் நகைச்சுவையாக தெரிவிக்கிறார். இதனால் முதல் பாடலை பாடியிருப்பது யார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் சஸ்பென்ஸாக மாறியுள்ளது. இந்த பாடல் வெளியாகும் நாளை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கி வருகின்றனர்.

Advertisement

Advertisement