• May 23 2026

குஷ்புவின் இன்ஸ்டாகிராம் போஸ்ட்டால் ரவிமோகன்- ஆர்த்திக்கிடையில் வெடித்த சர்ச்சை.!

shali / 55 minutes ago

Advertisement

Listen News!

நடிகர் ரவி மோகன் மற்றும் அவரது மனைவி ஆர்த்தி ரவி தொடர்பான விவாகரத்து வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், சமீபத்திய நிகழ்வுகள் மீண்டும் இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. 


அண்மையில் அளித்த பேட்டியில் ரவி மோகன், தனது குடும்ப வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கு “மூன்றெழுத்து இட்லி நடிகை” காரணம் என மறைமுகமாக குறிப்பிட்டு பேசினார். நேரடியாக பெயர் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவரது பேச்சு சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

இதையடுத்து பலரும் அந்த நடிகை யார் என்பது குறித்து பல்வேறு ஊகங்களை முன்வைத்து வருகின்றனர். அதில், ஆர்த்தி ரவி நடிகை குஷ்புவுடன் நெருக்கமான நட்பில் இருப்பதால், ரவி மோகன் குறிப்பிட்டது குஷ்புவைத் தான் என சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த விவகாரம் இணையத்தில் வேகமாக பரவி, பல்வேறு கருத்து மோதல்களுக்கு வழிவகுத்துள்ளது.

இந்நிலையில், மனஅழுத்தத்தை குறைக்கும் நோக்கில் நடிகர் ரவி மோகன் சபரிமலை ஐயப்பனுக்கு மாலை அணிந்து விரதம் மேற்கொண்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. குடும்ப பிரச்சனைகளுக்கு மத்தியில் அவர் ஆன்மிக வழியில் மன அமைதி தேடி வருகிறார் என கூறப்படுகிறது.


மற்றொரு பக்கம், ஆர்த்தி ரவி தனது மகன் மற்றும் குடும்பத்தினருடன் இணைந்து, நடிகை குஷ்புவின் குடும்பத்தினரை சந்தித்துள்ளார். அந்த சந்திப்பின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை குஷ்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் ஆர்த்தி ரவி குஷ்புவை கட்டியணைத்தபடி எடுத்துள்ள புகைப்படம் சமூக வலைதளங்களில் அதிக கவனம் பெற்றுள்ளது.

இந்த புகைப்படம் வெளியானதும், இணையவாசிகள் பலரும் பல்வேறு கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர். சிலர் இதை சாதாரண குடும்ப சந்திப்பு எனக் கூறினாலும், சிலர் தேவையில்லாமல் புதிய சர்ச்சையை உருவாக்கும் செயல் என விமர்சித்து வருகின்றனர். இதனால் இந்த விவகாரம் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.


Advertisement

Advertisement