• May 04 2024

ஒரே இரவில் இப்படி காணாமல் போய் விட்டதே... குமுறும் குஷ்பூ... நடந்தது என்ன..?

Prema / 1 year ago

Advertisement

Listen News!

டுவிட்டர் நிறுவனத்தை எலான் மஸ்க் வாங்கிய காலத்திலிருந்து தற்போது வரை அதில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்து வருகின்றார். அந்தவகையில் டுவிட்டர் லோகோவான குருவியை மாற்றிவிட்டு நாய்க்குட்டியை வைத்தார். ஆனால் சில மணி நேரங்களில் மீண்டும் பழையபடி குருவியையே வைத்தார்.


அவர் செய்த அவ்வாறான மாற்றங்களில் ஒன்று தான் சந்தா கட்டி ப்ளூ டிக் பெறுவது. அந்த காலக்கெடு ஆனது நேற்று இரவுடன் முடிவுக்கு வந்தது.  இதனைத் தொடர்ந்து சந்தா கட்டாத பிரபலங்களின் டுவிட்டர் ப்ளூடிக் தற்போது நீக்கப்பட்டு உள்ளது. இதனால் மில்லியன் கணக்கிலான பாலோவர்களைக் கொண்ட பிரபலங்களும் ப்ளூ டிக்கை இழந்துள்ளனர்.


அந்தவகையில் நடிகை குஷ்பூவும் டிவிட்டர் கணக்கின் ப்ளூ டிக்கை இழந்தார். இது குறித்து தற்போது டுவிட்டரிடம் கேள்வி எழுப்பியுள்ளார் நடிகை குஷ்பூ. இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள டிவிட்டில் "டியர் டிவிட்டர், என் புளூ டிக் ஏன் ஒரே இரவில் காணாமல் போனது?? எனது அக்கவுண்ட் ஆக்டிவாக உள்ளது" என்று கோபம் கலந்த வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement