• Apr 02 2025

x தள சர்ச்சையில் சிக்கிய பாடகி ஸ்ரேயா கோஷல்..! ரசிகர்களுக்கு எச்சரிக்கை..

Mathumitha / 1 month ago

Advertisement

Listen News!

இந்தியாவின் பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இசை மற்றும் குரலுக்கு உலகம் முழுவதும் ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவரது இசைக்கு மயங்காதவர்கள் யாரும் இல்லை என்றே சொல்லலாம் இந்நிலையில் இவர் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு அதிர்ச்சியூட்டும் செய்தியை வெளியிட்டுள்ளார்.


அதாவது தனது X தள கணக்கை யாரோ பெப்ரவரி 13ம் தேதி முதல் ஹேக் செய்துவிட்டதாக ஸ்ரேயா கோஷல் கூறியுள்ளார். கணக்கை மீட்க முயற்சி செய்தாலும் அதை மீண்டும் பெற முடியவில்லை இருப்பினும் நான் எனது பக்கத்தை விரைவில் delete செய்வதற்காக முயற்சித்து வருகின்றேன் என கூறியுள்ளார். 


இந்நிலையில் தனது X பக்கத்தில் வரும் அனைத்து பதிவுகள், லிங் மற்றும் மெசேஜ்களை யாரும் நம்ப வேண்டாம் என அவர் தனது ரசிகர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

Advertisement