• May 05 2024

லால் சலாம் படக்குழுவினருடன் இணைந்து பிறந்தநாளைக் கொண்டாடிய விஷ்ணு விஷால்- பேர்த்டே கிளிக்ஸ்

stella / 9 months ago

Advertisement

Listen News!

தனுஷ் நடிப்பில் வெளியான 3 படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். இதனை அடுத்து வை ராஜா வை என்னும் திரைப்படத்தை இயக்கி இருந்தார். தற்போது லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார். தனுஷுடனான பிரிவு அறிவிப்பிற்கு பிறகு முஷாபிர் என்ற இசை ஆல்பத்தையும் 4 மொழிகளில் வெளியிட்டார்.

 கிரிக்கெட்டை மையமாக கொண்டு உருவாகிவருகிறது லால் சலாம். இந்தப் படத்தில் நடிகர் ரஜினிகாந்தும் மொய்தீன் பாய் என்ற கேமியோ ரோலில் நடித்துள்ளார். இவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் மும்பை, சென்னை, திருவண்ணாமலை போன்ற இடங்களில் நடத்தப்பட்டன.


இந்நிலையில் அடுத்தடுத்த சூட்டிங்கில் அவர் கவனம் செலுத்தி வருகிறார். இதனிடையே, நேற்றைய தினம் லால் சலாம் சூட்டிங் ஸ்பாட் அதிகமான கொண்டாட்டத்துடன் காணப்பட்டது. படத்தின் நாயகன் விஷ்ணு விஷாலின் பிறந்தநாள் மற்றும் படத்தின் 2வது ஷெட்யூல் நிறைவு இரண்டையும் படக்குழுவினர் சூட்டிங் ஸ்பாட்டில் கொண்டாடி மகிழ்ந்தனர்.


 இதற்காக கேக் வெட்டப்பட்டு, ஐஸ்வர்யா ரஜினி, அவருக்கு ஊட்டிய நிகழ்வும் நடைபெற்றது. தொடர்ந்து படக்குழுவினர் ஒட்டுமொத்தமாக புகைப்படங்களை எடுத்து அதை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். மேலும் படத்தின் இரண்டாவது ஷெட்யூல் நிறைவையும் கேக் வெட்டி படக்குழுவினர் கொண்டாடியுள்ளனர்.


கிரிக்கெட் வீரராக வேண்டும் என்ற கனவுடன் வலம்வந்தவர் விஷ்ணு விஷால். ஆனால் வாழ்க்கை அவரது கேரியரை மாற்றி அவரை சினிமா நடிகராக மாற்றிய நிலையில், முன்னதாக ஜீவா என்ற கிரிக்கெட் சம்பந்தமான படத்திலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement