• Jun 26 2024

படப்பிடிப்பில் விபத்துக்குள்ளான விஷால்.. ஷூட்டிங் பாதியில் நிறுத்தம் -நடந்தது என்ன..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

விஷாலின் முதல் பான் இந்தியா திரைப்படமாக லத்தி உருவாகியுள்ளது. அறிமுக இயக்குநர் வினோத் குமார் லத்தி படத்தை இயக்கியுள்ளார். விஷாலுக்கு ஜோடியாக நடிகை சுனைனா நடித்துள்ளார்.

யுவன் சங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். மேலும் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் லத்தி படம் வெளியாகவுள்ளது.

நடிகர் விஷால் நடிப்பில் வெளியான எனிமி, வீரமே வாகை சூடவா போன்ற படத்தை தொடர்ந்து அடுத்ததாக இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கும் படம் லத்தி.

மேலும் இப்படத்தை ராணா புரொடக்ஷ்ன்ஸ் சார்பில் நடிகர் ரமணா, நந்தா இணைந்து தயாரித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரியில் நடைபெற்ற போது நடிகர் விஷால் கையில் காயம் ஏற்பட்டது. இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் ரத்தானது. பின்னர் கேரளாவுக்கு சென்று சிகிச்சை எடுத்து கொண்டு மீண்டும் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

லத்தி படத்தில் மீண்டும் ஒரு சண்டைக் காட்சி சென்னையில் நடைபெற்று வருகின்றது. இன்னும் சில நாட்களில் படப்பிடிப்பு முடிவடைந்து விடும் என்பதால், இரவு பகலாக சண்டை காட்சியை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் படமாக்கி வருகின்றார். அதில், கைதி ஒருவரை ஜீப்பில் ஏற்றி கொண்டு விஷால் செல்கின்றார். அப்போது விஷாலை 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் கத்தி, கம்புகளுடன் ஜீப்பை தாக்குகின்றனர்.

அப்போது விஷால், தைரியமாக கீழே இறங்கி அவர்களை அடித்து தாக்கி கொண்டு கைதியை பிடித்து செல்கின்றார். இந்த காட்சியில், 100க்கும் மேற்பட்ட ரவுடிகள் விஷாலை சுற்றிகொண்டு கை, கால், உடம்பில் தாக்குவது போல காட்சி படமாக்கப்பட்டு வந்தது. இந்த சண்டைக் காட்சியில் எதிர்பாராத விதமாக காலில் அடி விழ, துடிதுடித்து கீழே விழுந்துள்ளார் விஷால். உடனே அவருக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்றனர். இதனால், லத்தி படத்தின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

மேலும் விஷாலை பரிசோதித்த மருத்துவர்கள் காலில் எலும்பு முறிவு எதுவும் இல்லை என்றும், பிசியோ தரப்பி செய்தால் சரியாகி விடும் என்றும் கூறினர். நாளை மீண்டும் பரிசோதிக்கப்பட்டு வலி இல்லையென்றால் விஷால் படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்படுகிறது. விஷால் விபத்தில் சிக்கியதாக தகவல் பரவியதை அடுத்து ரசிகர்கள் கவலை அடைந்தனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement