• Mar 28 2023

விஜயகாந்திற்கு பாராட்டு விழா நடத்த முடிவு செய்த விஷால்.. அதுவும் எங்கு தெரியுமா..!

Prema / 2 weeks ago

Advertisement

Listen News!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவராக முன்னர் விஜயகாந்த் தான் இருந்து வந்தார்.பின்னர் இவரைத் தொடர்ந்து சரத்குமார் பல ஆண்டுகளாக தலைவராக இருந்து வந்தார். இவரையடுத்து 2015 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் நடிகர் சங்கத்திற்கான இடத்தில் சங்க கட்டிடம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி களமிறங்கிய நாசர் தலைமையிலான விஷால் அணி வெற்றி பெற்றது. 


இவர்களின் வெற்றியைத் தொடர்ந்து ரஜினி, கமல் செங்கல் எடுத்து கொடுக்க கோலகலமாக நடிகர் சங்கம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் ஆண்டுகள் கடந்ததே தவிர இன்னும் கட்டிடம் கட்டி முடிக்கப்படவில்லை. இந்நிலையில் நடிகர் விஷால் தற்போது புதிதாக கட்டப்படும் நடிகர் சங்க கட்டிடம் ஓராண்டுக்குள் கட்டி முடிக்கப்படும் என தெரிவித்துள்ளார். 


அதுமட்டுமல்லாது நடிகர் சங்க கட்டிடம் கட்டுவதற்கான முயற்சியில் நடிகர் விஜயகாந்தின் பங்களிப்பு மிகப்பெரியது. நடிகர் சங்கத்தின் பத்திரத்தை மீட்ட அவரோட உழைப்புக்கு மரியாதை அளிக்கும் விதமாக புதிதாக அமைக்கப்பட்டுள்ள நடிகர் சங்க கட்டிடத்திற்குள் அவருக்கு பாராட்டு விழா நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement

Advertisement

Advertisement