• May 07 2024

விருமன் பட பாடல் சர்ச்சை -திடீரென பாடகி ராஜலட்சுமி கொடுத்த விளக்கம்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவிற்கு வருகை தந்துள்ள இயக்குநர் ஷங்கரின் மகளால் அடிக்கடி புதிய சர்ச்சை எழுந்துள்ள தகவல் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.

முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் திரைப்படம் 'விருமன்'. அதிதி சங்கர், சூரி, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பல முக்கிய நட்ச்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்திற்கு யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.இவ்வாறுஇருக்கையில் இப்படம் வரும் ஆகஸ்ட் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

அதிதி ஷங்கர் நடிப்பு மட்டுமின்றி இந்த படத்தில் அவர் யுவன் ஷங்கர் ராஜாவுடன் சேர்ந்து 'மதுரவீரன்' என தொடங்கும் பாடலையும் பாடியுள்ளார்.

அத்தோடு இந்த பாடலை முதன் முதலில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கிராமிய பாடகி ராஜலட்சுமி தான் பாடி இருக்கிறார்.

ஆனால் படக்குழு இறுதியில் ராஜலட்சுமியின் குரலை நீக்கிவிட்டு அதிதியை பாட வைத்திருப்பதாக தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

இந்நிலையில் இதுகுறித்து, பாடகி ராஜலட்சுமி கூறுகையில், “எனக்கு இதில் எந்த வருத்தமும் கிடையாது. அதிதி நன்றாகவே அந்தப் பாடலை பாடியுள்ளார்.

எனது குரல் செட் ஆகாமல் இருந்திருக்கலாம். அதற்காக கூட அதிதியை மாற்றியிருக்கலாம். ஆடியோ வெளியீட்டு விழாவில் அதிதி பாடியது நன்றாக இருந்தது.

அத்தோடு சரியானவர்களுக்கு தான் வாய்ப்பு கொடுத்துள்ளார்கள் என்பதில் சந்தோசமே” என்று ராஜலட்சுமி தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement