• May 06 2024

வாரிசு படத்தில் நடிகர் ஷாமின் கதாப்பாத்திரம் இது தானா?- அடடே சூப்பர் அப்டேட்டாக இருக்கே

stella / 1 year ago

Advertisement

Listen News!

எஸ். ஜே சூர்யா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான குஷி படத்தின் மூலம் துணை நடிகராக அறிமுகமாகியவர் தான் ஷாம். இவர் இதனைத் தொடர்ந்து பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை சேர்த்தவர்.

மேலும் சமீபகாலமாக கதாப்பாத்தரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகின்றார்.அந்த வகையில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு விஜய்யுடன் மீண்டும் இணைந்து வாரிசு படத்தில் நடித்து வருகின்றார்.

வாரிசு படத்தின் படப்பிடிப்பானது விசாகப்பட்டினத்தில் பெரிய ஷெட்யூலில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இதற்கிடையே லேட்டஸ்ட்டாக லீக்கான வாரிசு வீடியோவில், விஜய் மற்றும் ஷாம் ஆகியோர் விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கப்பல் தொழிலாளர்கள் குழுவுடன் சண்டையிடுவதைக் காண முடிந்தது.

இதையடுத்து படத்தில் விஜய்யின் சகோதரராக ஷாம் நடிப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிப்பதோடு பிரபு, பிரகாஷ் ராஜ், குஷ்பு, சங்கீதா, ஜெயசுதா, சரத்குமார், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

வாரிசு படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைக்கிறார். அத்தோடு விஜய்யுடன் முதல் முறையாக கைகோர்த்துள்ளதால், தனது பெஸ்ட்டை கொடுக்கும் நோக்கில், அவர் தீவிரமாக பணியாற்றி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement