• May 03 2024

வருகிறது 'விலங்கு-2'.. குட்நியூஸ் சொன்ன விமல்.. மகிழ்ச்சியின் உச்சத்தில் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

ப்ரூஸ் லீ படத்தை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ்- விமல் கூட்டணியில் வெளியான முதல் வெப் சீரிஸ்தான் 'விலங்கு'. இந்த வெப் சீரிஸில் மொத்தமாக 7 எபிசோடுகள் காணப்பட்டது. இதில் விமலோடு இணைந்து இனியா, பாலசரவணன், முனிஸ்காந்த, ரேஷ்மா, மனோகர் எனப் பலரும் நடித்துள்ளனர்.


மேலும் திருச்சி மாவட்டத்திலிருந்து சில கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு கிராமத்தில் அமைந்திருக்கும் காவல் நிலையத்தை மையமாக வைத்து நடக்கிறது கதையை மையமாக கொண்டு இந்த சீரிஸ் அமைந்திருந்தது. அதாவது காவல் நிலைய எல்லைக்குள் ஒரு அடையாளம் தெரியாத சடலம் கிடைக்கிறது. அதைப் பற்றி காவல்துறை விசாரித்துக்கொண்டிருக்கும்போதே, அதன் தலை காணாமல் போகிறது இதன் தொடர்ச்சியாகவே கதை அமைந்திருந்தது.


இந்த சீரீஸ் ஆனது ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளமையை அடுத்து இதன் 2-ஆம் பாகத்தையும் உருவாக்க முடிவு செய்துள்ளனர். அந்தவகையில் விரைவில் விலங்கு-2 சீரீஸ் ஆரம்பிக்க உள்ளதாக நடிகர் விமல் அறிவிப்பொன்றினை வெளியிட்டுள்ளார்.

இதனை அறிந்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement