• May 04 2024

பார்ட்டி ஒன்றில் குத்தாட்டம் போட்டு ரசிகர்களை பிரமிக்க வைத்த விக்ரம் பட ஏஜன்ட் டீனா

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடன இயக்குநராக திகழ்பவர் வசந்தி. இவரை ஏஜென்ட்  டீனா என்று சொன்னால்தான் பலருக்கும் தெரியும். அந்த அளவிற்கு விக்ரம் படத்தின் மூலம் இவர் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார். நடனத்தின் மீது இருந்த ஆர்வத்தினால் இவர் சினிமாவில் நடன கலைஞராக அறிமுகமானார்.

அதன் பின் தன்னுடைய கடின உழைப்பினால் படிப்படியாக முன்னேறி நடன இயக்குநர்களுக்கு உதவி நடன இயக்குநராக பணியாற்றினார் வசந்தி. பின் இவர் தமிழ் சினிமாவில் முன்னணி பின் திகழும் அஜித், விஜய், சூர்யா என பல நடிகர்களுக்கு நடன இயக்குநராகப் பணியாற்றி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 200க்கும் அதிகமான படங்களில் பணியாற்றி இருக்கிறார்.


 இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பழமொழி படங்களின் பாடலுக்கும் நடமாடி இருக்கிறார்.அதுமட்டுமில்லாமல் கடந்த ஆண்டு வினோத்குமார் இயக்கத்தில் போனிகபூர் தயாரிப்பில் அஜித் நடித்திருந்த வலிமை படத்திலும் வசந்தி நடன இயக்குநராக பணி புரிந்திருந்தார்.

 இப்படி 30 வருடங்களுக்கும் மேலாக சினிமாவில் நடன இயக்குநராக இருந்த வசந்தி அவர்கள் விக்ரம் படத்தின் மூலம் தான் நடிகையாக அறிமுகமானார். இந்த படத்தின் மூலம் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. இதனை தொடர்ந்தும் இவருக்கு சினிமா பட வாய்ப்புகள் வருவதாக கூறப்படுகிறது.


இந்த நிலையில் தற்போது வசந்தியின் நடன வீடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, சமீபத்தில் நடந்த பார்ட்டி ஒன்றில் ஏஜென்டினா கலந்து கொண்டிருக்கிறார். அதில் அவர் சேலையில் கலந்து குத்தாட்டம் போட்டு இருக்கிறார்.இதை பார்த்து ரசிகர்கள் பலரும் பிரமித்து பாராட்டி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement