• Dec 01 2022

விக்ரம் 100-வது நாள் விழா..உண்மையை சொல்லட்டுமா என கமலிடம் கேட்ட உதயநிதி-முழுவுவதையும் சொல்லிட்டாரே..!

Listen News!
Aishu / 3 weeks ago
image
Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக திகழும் நடிகர் கமல்.  கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான விக்ரம் படம் லோகேஷ் கனகராஜ் உள்ளிட்டோரை வைத்து விக்ரம் பட அறிமுக விழா நடந்தது. அது மிக கடுமையான கொரோனா லாக்டவுன் காலகட்டம். அந்த நேரத்தில் விக்ரம் படம் குறித்த அறிவிப்பு வெளியானவுடன் பரபரப்பு தொற்றிக் கொண்டது. 

எனினும் அதைவிட முக்கியமான விஷயம் அந்த நேரத்தில் புஷ்பா, ஆர்.ஆர்.ஆர். போன்ற படங்கள் வெளியாகி பெருத்த வரவேற்பு பெற்றிருந்த நேரம். விக்ரம் படத்தில் பகத் பாஸில், விஜய் சேதுபதி இணைகிறார்கள் என்ற தகவல் மேலும் ரசிகர்களுக்கு ஆர்வத்தை ஏற்படுத்தியது. அத்தோடு விக்ரம் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை, யாரும் எதிர்பாராத வெற்றியை பெற்று தந்தது.

இந்தப் படத்தின் தமிழக விநியோக உரிமையை முதலில் அன்புச்செழியன் பண்ணுவதாக இருந்தது.இதன்  பின்னர் உதயநிதி கேட்டுக் கொண்டதின் பேரில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் திரைப்படத்தின் தமிழக உரிமையை வாங்கியது. உரிமையை வாங்கியது முதல் அதை ப்ரொமோட் செய்யும் வேலைகளில் மிக தீவிரமாக ரெட் ஜெயண்ட் மூவிஸ் இறங்கினர். அப் படத்தை தமிழகம் முழுவதும் கொண்டு சேர்ப்பதில் மிகப்பெரிய வேலையை ரெட் ஜெயன்ட் மூவிஸ் செய்தது. 

மேலும் அதில் உதயநிதியின் பங்கு அளப்பரியது என்று கூறலாம். தமிழகம் முழுவதும் ரிலீஸ் செய்யப்பட்ட விக்ரம் படம் தியேட்டர்களில் வசூலை அள்ளிக் குவித்தது.அத்தோடு தமிழ் படத்தில் இயக்குநர்களே இல்லையா என்று எள்ளி நகையாடிய தெலுங்கு, கன்னடா ரசிகர்களின் வாயை அடைக்கும் விதமாக விக்ரம் படத்தை வெற்றிபெற வைத்து தமிழ் திரையுலகின் மானத்தை காத்தனர் ரசிகர்கள்.விக்ரம் படம் வெற்றி பெற்றவுடன் அதன் வெற்றிக்காக இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கமல்ஹாசன் கார் ஒன்றை பரிசளித்தார். நடிகர் சூர்யாவை வீட்டில் சென்று பார்த்து வாழ்த்தி தனது ரோலக்ஸ் வாட்சை கழற்றி அவர் கையில் அணிவித்தார். அது ரசிகர்களிடத்தே வைரலாகி வருன்றது.

கமல்ஹாசன் திரை வாழ்க்கையில் அவர் சந்தித்திராத வெற்றியை பெற்றுக்கொடுத்த விக்ரம் படத்திற்காக வெற்றி விழாக்கள் நடந்து வருகிறது. கமல் பிறந்த நாளுடன் சேர்த்து விக்ரம் பட வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதலில் கமல்ஹாசனிடம், சார் நான் இப்போதாவது உண்மையை சொல்லட்டுமா? என்று கேட்க கமல்ஹாசன் சிரித்தபடியே தலையை ஆட்டினார்.

இதன் பின்னர் பேசிய உதயநிதி "இந்த படம் பார்க்க என்னிடம் முதலில் கமல்ஹாசன் அழைத்திருந்தார். நான் உட்பட சிலர் மட்டுமே படத்தை பார்த்தோம். அந்த படத்தின் இண்டர்வெல் காட்சியை பார்த்து பிரமித்து போய் விட்டேன். மேலும் இதுவரை என் வாழ்க்கையில் நான் பார்க்காத ஒரு இன்டர்வல் காட்சியாக அமைந்தது. படம் முடிந்த பின் இந்த படம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று நான் கூறினேன். இந்த படத்தின் ஆடியோ லாஞ்சில் கூட புல்லட் டிரெயின் மாதிரி படம் வேகம் எடுக்கும் என்று தெரிவித்திருந்தேன். ஆனால் அது புல்லட் ட்ரைன் அல்ல ராக்கெட் என்பது பின்னர் தான் தெரிந்தது.

மேலும் இந்த படத்திற்காக எனக்கு வாய்ப்பை வழங்கிய கமல் சாருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த படத்தின் வெற்றி எந்த அளவுக்கு என்றால் இதுவரை எங்களுடைய ஷேர் மட்டுமே 75 கோடி ரூபாய் வந்துள்ளது. இன்னும் பல வாரங்கள் இது ஓடும். தியேட்டர்களில் கூட்டம் அலைமோதுகிறது, டிக்கெட் கேட்டு வாரவாரம் போன் கால்கள் வருகிறது என்று பாராட்டினார்" அதை சிரித்தபடியே கமல்ஹாசன் பார்த்துக் கொண்டிருந்தார்.