• May 12 2024

விக்ரம் - மாளவிகா இணையும் "தங்கலான்" டீஸர்- இதுவரை பார்த்திராக கெட்டப்பில் சியான்

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் சியான் 61 படத்திற்கு 'தங்கலான்' என்கிற வித்தியாசமான டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு சியான் விக்ரம் ரசிகர்களுக்கு செம சந்தோஷமான ஆண்டாகவே மாறியுள்ளது. மகான், கோப்ரா, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து சியான் விக்ரமின் திறமையான நடிப்பை கண்டு ரசிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அடுத்த படத்தின் அட்டகாசமான அப்டேட்டும் வெளியாகி உள்ளது.

அதாவது கேஜிஎஃப் எனப்படும் கோலார் தங்க சுரங்கத்தின் உண்மை வரலாற்றை படமாக இயக்கப் போகிறேன் என இயக்குநர் பா. ரஞ்சித் சொன்னதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எகிறியது. இவ்வாறுஇருக்கையில், சியான் விக்ரமை வைத்து இப்படியொரு டைட்டிலில் தரமான சம்பவத்தை பா. ரஞ்சித் பண்ணுவார் என ரசிகர்கள் யாருமே எதிர்பார்க்காத நிலையில், தங்கலான் அறிமுக டீசரே வெளியாகி உள்ளது.

இவ்வாறு இருக்கையில்  சியான் விக்ரமுக்கு ஜோடியாக மாளவிகா  தங்கலான் படத்தில் அவர் நடித்து வருகிறார் என்கிற அறிவிப்பும் டீசரில் அவரது தோற்றமும் வெளியாகி உள்ளது.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்து வரும் இந்த படத்தில் மலையாள நடிகை பார்வதியும் நடித்துள்ளார். அவரது மிரட்டலான காட்சிகளும் டைட்டில் டீசரில் வெளியாகி உள்ளது. சுதந்திர போராட்டக் காலக்கட்டத்தில் கோலாரில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி இந்த படம் உருவாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.

இதோ அந்த ட்ரெயிலர்...




Advertisement

Advertisement

Advertisement