• Sep 21 2023

லைகா நிறுவனத்தின் தயாரிப்பில்... இயக்குநராக அறிமுகமாகும் விஜய் மகன் சஞ்சய்... வெளியானது அறிவிப்பு...!

Prema / 3 weeks ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் வெற்றி நாயகனாகவும் உச்ச நட்சத்திரமாகவும் திகழ்ந்து வருபவர் விஜய். இவருக்கு திருமணமாகி ஒரு மகன் மற்றும் மகள் உள்ள நிலையில், அவரின் மகன் ஜேசன் சஞ்சய் கனடாவில் திரைப்பட இயக்கம் சம்மந்தமான படிப்பை முடித்துள்ளார். 


இதனையடுத்து ஜேசன் சஞ்சய் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகி இருந்தன. அந்தவகையில் கனடாவில் 'புல் தி டிரிகர்' என்ற குறும்படத்தை இயக்கியுள்ளதாக சொல்லப்படுகிறது. இது சம்மந்தமான புகைப்படங்கள், மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றுள்ளன.


இந்நிலையில் தற்போது மற்றுமோர் தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது விஜய்யின் மகன் சஞ்சய் லைகா நிறுவனத்தின் தயாரிப்பின் கீழ் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகின்றார்.


இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. இவரிற்குப் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement

Advertisement