• May 07 2024

எலும்பும் தோலுமாகப் பரிதாப நிலைக்கு மாறிய விஜயகாந்த்.. நேரில் சென்று பார்த்த விஜய்யின் தந்தை..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தவரே கேப்டன் விஜயகாந்த். தன்னுடைய கம்பீரமான நடிப்பின் வாயிலாக பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனங்களைக் கொள்ளை கொண்டிருக்கின்றார். இவர் நடிப்பில் உருவான வெற்றிப் படங்களோ ஏராளம். 


அந்தவகையில் இவர் கடந்த பல ஆண்டுகளுக்கு முன் சினிமாவில் இருந்து விலகி, அரசியலில் களமிறங்கினார். இருப்பினும் இதன்பின் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சையில் இருந்து வரும் விஜயகாந்த், மீண்டும் பழையபடி எப்போது கம்பீரமான கேப்டனாக வருவார் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்க்கின்றனர்.


இந்நிலையில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னுடைய மகனான விஜய் சினிமா வாழ்க்கையில் இந்த இடத்தினை பெற மிகமுக்கிய காரணமாக இருந்த விஜயகாந்த் அவர்களை நேரில் சந்தித்து அவரின் உடல்நிலை குறித்துப் பேசியுள்ளார்.


அதுமட்டுமல்லாது விஜயகாந்துடன் இணைந்து அவர் எடுத்த புகைப்படமும், அத்தோடு கையில் முத்தம் கொடுத்த புகைப்படத்தையும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் எஸ்.ஏ.சி.


இதனைப் பார்த்த விஜயகாந்த் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் பலரும் விஜயகாந்த் விரைவில் குணமடைய தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.


Advertisement

Advertisement

Advertisement