• Apr 28 2024

விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர்-மைக்கேல் பட சந்திப்பில் பேசிய சந்தீப் கிஷன்

stella / 1 year ago

Advertisement

Listen News!

இயக்குநர் ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், நடிகர் சந்தீப் கிஷன் விஜய் சேதுபதி இணைந்து நடித்திருக்கும் படம் 'மைக்கேல்' ரொமான்ஸ் ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படம் இந்தியாவின் பல மொழிகளில் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் பட வெளியீட்டையொட்டி படக்குழுவினர் பத்திரிக்கை, ஊடக நண்பர்களைச் சந்தித்தனர்.

இதில் தயாரிப்பாளர் SR பிரபு பேசியதாவது.,

" சந்தீப் தான் மாநகரம் திரைப்படத்தை என்னிடம் கொண்டு வந்தார். இந்த படத்தில் இருக்கும் அனைவருடனும் தனித்தனியாக நான் பணியாற்றி இருக்கிறேன். தனது ஒவ்வொரு படத்திலும் புதுப்புது பாணியில் ரஞ்சித் ஜெயக்கொடி பயணிக்கிறார். அவர் அதிகமாக நேரம் எடுத்து தனித்துவமான திரைப்படத்தை உருவாக்குகிறார். படக்குழுவிற்கு எனது வாழ்த்துகள். சந்தீப் உடைய எனர்ஜிக்கு ஏற்ற படங்கள் இன்னும் வரவில்லை என்று தான் கூற வேண்டும். அவர் இன்னும் பல வெற்றிப்படங்களைக் கொடுக்க வேண்டும். இப்படத்தில் பங்குபெற்றுள்ள அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். " என்றார்.


தொடர்ந்து நடிகை ரெஜினா கசாண்ட்ரா பேசியதாவது.., " எனக்கும் சந்தீப்புக்குமான நட்பு மிகவும் ஆழமானது. சந்தீப் தொடர்ந்து நல்ல கதைக்கரு கொண்ட படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் ட்ரெய்லர் பார்க்க மிக நன்றாக இருக்கிறது. இந்த படத்தைப் பார்க்க நான் ஆவலாய் இருக்கிறேன். சாம் உடைய சிறப்பான இசை மற்றும் ரஞ்சித் உடைய உழைப்பு இந்த படத்தைச் சிறப்பாக மாற்றியுள்ளது. இந்த படம் வெற்றியடைய எனது வாழ்த்துகள் என்று கூறினார்.

தொடர்ந்து நடிகர் சந்தீப் கிஷன் பேசியதாவது., " இந்த படத்திற்கு ஒரு சிறிய எதிர்பார்ப்பு இருக்கிறது, அது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தயாரிப்பாளர் பரத் தான் எங்களுக்கு உத்வேகம் அளித்து, எங்களது இந்த கனவை இப்பொழுது மைக்கேலாக மாற்றியுள்ளார். சாம் CS-க்கு இன்னும் பெரிய வரவேற்பு கிடைக்க வேண்டும், அவர் பெரிய இடத்தை அடைய வேண்டும், அவர் உடைய உழைப்பு அளப்பரியது. ரஞ்சித் ஒரு மனிதராக நல்ல குணம் கொண்டவர், அவருடன் பயணித்ததில் மகிழ்ச்சி.


 மைக்கேல் படம் எனக்குக் கொடுத்ததற்கு அவருக்கு நன்றி. மொழி தாண்டி இந்த படத்தில் சிறப்பான நடிப்பைக் கதாநாயகி வழங்கியுள்ளார். கௌதம் சாரிடம் நான் உதவி இயக்குநராக பணியாற்றி இருக்கிறேன். இப்போது அவருடன் இணைந்து திரையைப் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சி. விஜய் சேதுபதி நல்ல குணம் கொண்ட தங்கமான மனிதர், பிஸியான நேரத்தில் அவர் எங்களுக்காக அவருடைய தேதிகளை ஒதுக்கி, இந்த படத்தில் நடித்துக் கொடுத்தார். அவருக்கு எங்களது நன்றிகள். நட்புக்காக லோகேஷ் இந்த படத்திற்குள் வந்தார். பின்னர் அவர் படத்தைப் பார்த்தார், அவருக்குப் படம் பிடித்து இருந்தது. இந்த படத்துக்கு உங்களது ஆதரவு தேவை. இதுவரை நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி என்றும் கூறியுள்ளார்.



Advertisement

Advertisement

Advertisement