• May 12 2024

லண்டன் உணவகத்தில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நடிகர் ஷாருகான்- வைரலாகி வரும் புகைப்படம்

stella / 1 year ago

Advertisement

Listen News!

நடிகர் அட்லி இயக்கத்தில் ஜவான் என்னும் திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இது தவிர இயக்குநர் ராஜ்குமார் ஹிரானி என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்த வகையில் ஷாருக்கானின் ரெட் சில்லி நிறுவனம், ராஜ் குமார் ஹிரானியின் நிறுவனம் இணைந்து DUNKI என்ற இந்த படத்தை தயாரிக்கின்றன.

Dunki திரைப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக நடிகை டாப்ஸி நடிக்கவுள்ளார். இந்த படத்தின் வெள்ளோட்ட படப்பிடிப்பு இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் ஆரம்பமாகியது.இங்கிலாந்து வாழ் ஷாருக்கான் ரசிகர்கள் மூலம் இந்த புகைப்படங்கள் ஏற்கனவே வெளியாகி உள்ளன.

வாட்டர்லூ பிரிட்ஜில் ஆற்றங்கரையில் இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்த பின் உலகின் மிக விலையுயர்ந்த உணவகமான IL Borro London உணவகத்திற்கு சென்றார். அங்கு ஷாருக்கான் வந்திருப்பதை கண்ட இந்திய சமையல் கலைஞர்கள் ஷாருக்கான் உடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

இந்த புகைப்படத்தை சமையல் கலைஞர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து கூறியதாவது " நீங்கள் ஒரு விஷயத்தை விரும்பினால் இந்த ஒட்டுமொத்த உலகமும் அதை உங்களை அடைய செய்யும்" என ஓம் சாந்தி ஓம் படத்தில் ஷாருக்கான் பேசும் வசனத்தை எழுதி பதிவிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement