• May 05 2024

விஜய் பட நடிகைக்கு திருமணம்; வைரலாகும் போட்டோசூட்

Jo / 1 year ago

Advertisement

Listen News!

"ஞான் நின்னோடு கூடேயுண்டு" என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகம் ஆனவர் அபர்ணா வினோத்.

இதனைத் தொடர்ந்து, 'கோஹினூர்' என்ற திரைப்படத்தில் நடித்திருந்த அபர்ணா வினோத், நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருந்த பைரவா என்ற திரைப்படத்திலும் நடித்திருந்தார். கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியாகி இருந்த இந்த திரைப்படத்தை பரதன் இயக்கி இருந்தார். 

விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்த நிலையில், இவர்களுடன் ஜெகபதி பாபு, டேனியல் பாலாஜி, சதீஷ் உள்ளிட்ட பலரும் பைரவா படத்தில் நடித்திருந்தனர். இதில் அபர்ணா வினோத்தும் நடித்திருந்தார்.

பைரவா படத்தை தொடர்ந்து பரத் நடித்திருந்த நடுவன் திரைப்படத்திலும் அபர்ணா வினோத் நாயகியாக நடித்து  இருந்தார்.

 இதனிடையே, அபர்ணா வினோத்திற்கும், கேரள மாநிலம் கோழிக்கோடு பகுதியை சேர்ந்த ரினில் ராஜ் என்பவருக்கும் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது. இருவரும் காதலித்து வந்த சூழலில், பெற்றோர்கள் சம்மதத்துடன் அவர்கள் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது.

இந்த நிலையில், ரினில் ராஜ் - அபர்ணா வினோத் ஆகியோரின் திருமணம் சமீபத்தில் கேரள மாநிலத்தில் வைத்து நடைபெற்றுள்ளது. இவர்களின் திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அபர்ணா வினோத், தனது திருமண புகைப்படங்களை  இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தொடர்ந்து அபர்ணா - ரினில் ஜோடிக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement