• May 05 2024

அதிர்ச்சி... பிரபல நகைச்சுவை நடிகர் மரணம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல இந்தி நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் ஜாவேத் கான் அம்ரோஹி. பழம்பெரும் நடிகரான ஜாவேத் கான் அம்ரோஹி 1980-களில் தூர்தர்ஷனில் பெரிய வரவேற்பை பெற்ற 'நுக்கத்' என்ற நகைச்சுவை தொடரில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார். 


இதன் பின்னர் இந்தியில் வெற்றி பெற்ற அமீர்கானின் 'லகான்', ஷாருக்கானின் 'சக் தே இந்தியா' ஆகிய படங்களில் நடித்து புகழ்பெற்றார். அத்தோடு 'அந்தாஸ் அப்னா, கூலி நம்பர் 1, ஹம் ஹைன் ரஹி பியார் கே' போன்ற வெற்றி பெற்ற படங்களில் ஜாவேத் கான் நடிப்பு திரையுலகில் பலராலும் பேசப்பட்டது. 


மேலும் இந்தியில் 150 படங்களுக்கு மேல் நடித்த இவர் கடைசியாக 2020ஆம் ஆண்டு வெளியான 'சதக் 2' படத்தில் நடித்திருந்தார். இந்திய மக்கள் திரையரங்க அமைப்பின் உறுப்பினராகவும் இருந்த ஜாவேத் கான், நீண்டகாலமாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்தார். அதாவது கடந்த ஒரு வருடமாக சுவாசக் கோளாறு நோயால் அவதிப்பட்டார். இதனால் இவரின் நுரையீரல் செயல் இழந்தது. 


இதன் காரணமாக மும்பையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி ஜாவேத் கான் அம்ரோஹி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 73. இந்நிலையில் இவரின் மறைவுக்கு நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரையுலகினர் பலரும் தங்களது இரங்கலைத் தெரிவித்து உள்ளனர்.

Advertisement

Advertisement

Advertisement