• May 07 2024

இரண்டாவது மகனுக்காக பிரபல நடிகரிடம் விஜயகாந்த் வைத்த கோரிக்கை- நிறைவேற முதலே இப்படியொரு நிலையா?

stella / 4 months ago

Advertisement

Listen News!


தமிழ் சினிமாவில் 90களில் பிரபல்யமான நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் விஜயகாந்த். கேப்டன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர் கடந்த டிசம்பர் 28ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். இவரது இறப்பானது திரையுலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அவரது இறுதி ஊர்வலத்தில் 15 லட்சம் பேர் கலந்து கொண்டதாக பிரேமலதா தெரிவித்திருந்தார். குறிப்பாக சினிமா நட்சத்திரங்கள் நேரில் வந்து அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்கள்.விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் இவரது இரண்டாவது மகன் சண்முகபாண்டியன் நீண்ட முடி மற்றும் தாடி வைத்திருந்தார். 


அவர் தற்போது படைத்தலைவன் என்ற படத்தில் நடித்து வருகிறார். அந்த படத்திற்காகவும் அடுத்து அவர் நடிக்க இருக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸுக்காகவும் தான் இப்படி முடி வளர்த்து இருக்கிறார் என்றும் கூறப்படுகின்றது.

சசிகுமார் இயக்கும் குற்றப்பரம்பரை வெப் சீரிஸ் பற்றி கேட்டதுமே விஜயகாந்த் தனது மகன் அதில் நடிக்க வேண்டும் என கூறினாராம்.ஆனால் அதற்கான ஷூட்டிங் துவங்கும் முன்பே அவர் காலமாகிவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

Advertisement

Advertisement

Advertisement