• May 07 2024

விஜயகாந்த்தின் இந்த நிலைமைக்கு காரணம் அவரின் மரணம் தான்.. பகீர் கிளப்பிய பிரபல இயக்குநர்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

கோலிவுட்டில் கேப்டன் என்ற அந்தஸ்துடன் உச்ச நடிகராக திகழ்ந்து வந்தவர் நடிகர் விஜயகாந்த். இவர் நடிகர் மட்டும் இல்லாமல் சிறந்த அரசியல்வாதியும் ஆவார். தன்னுடைய நடிப்புத் திறமை மூலம் இவர் ஏராளமான மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்து இருக்கிறார்.


இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக விஜயகாந்த் கடுமையான உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதாவது நடக்க முடியாமலும் பேச முடியாமலும் ரொம்ப அவதிப்பட்டு வருகிறார். மேலும் மற்றவர்களின் உதவி இல்லாமல் தன்னுடைய வேலையை கூட விஜயகாந்தால் தற்போது செய்து கொள்ள முடியவில்லை. 

இவரின் உடைய நிலையை பார்த்து ரசிகர்களும் தொண்டர்களும் விஜயகாந்துக்கா இந்த நிலைமை எனக் கூறி கண் கலங்கி வருகின்றனர். இந்நிலையில் விஜயகாந்தின் இந்த நிலைமைக்கான காரணம் என்ன என்பது குறித்து ஓப்பனாக பேசியிருக்கிறார் பிரபல இயக்குநரான பிரவீன் காந்தி. 


அந்தவகையில் அவர் கூறுகையில் " 2015ஆம் ஆண்டு விஜயகாந்தின் நெருங்கிய நண்பரான இப்ராஹிம் ராவுத்தர் மரணமடைந்தார். அந்த மரணம்தான் விஜயகாந்தை இந்த நிலைமையில் கொண்டுவந்து விட்டுள்ளது. ராவுத்தர் இருக்கும் வரை விஜயகாந்த் ரொம்பவே ஆக்டிவாக இருந்தார். குறிப்பாக சிங்கம் போல் இருந்தார் எனக் கூறலாம். 

அதுமட்டுமல்லாது ஆளுமை நிறைந்த தலைவராகவும் நடிகராகவும் இருந்தார். நல்ல குணங்கள் கொண்டவர். பணியாளர்களை கூட பணியாளர்கள் என்று பார்க்க மாட்டார் விஜயகாந்த். அவர்களுடன் குழந்தை போல் விளையாடுவார். நட்புக்கு சிறந்த உதாரணம் என்றால் அது விஜயகாந்தும் ராவுத்தரும் தான். பின்னர் ராவுத்தர் மரணமடைந்த போது வடபழனியில் அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. 


அந்த சமயத்தில் நான் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கே நின்றிருந்தேன். அப்போது அங்கு வந்தார் விஜயகாந்த். ராவுத்தரின் உடலை பார்க்கும் வரை நன்றாகதான் இருந்தார். அவரது உடலை பார்த்ததும் அப்படியே உடைந்து போய்விட்டார் விஜயகாந்த். தனக்காக தன் வாழ்க்கையை தியாகம் செய்த ராவுத்தர் மரணமடைந்துவிட்டார் என்பதை அவரால் கொஞ்சமும் நம்ப முடியவில்லை.

அவரின் மரணத்தினால் தான் விஜயகாந்த் குழம்பி போனார். அதாவது ராவுத்தரின் கடைசி காலத்தில் அவருடன் இல்லாமல் போய்விட்டோமே, நாம் உடனிருந்திருந்தால் ராவுத்தர் இறந்திருக்க மாட்டாரோ என்ற குற்ற உணர்வுதான் விஜயகாந்தை இந்தளவிற்கு நிலைகுலைய செய்துள்ளது. 


பல காலமாக விஜயகாந்த் மனதில் இருக்கும் இந்த குற்ற உணர்வு யாருக்கும் தெரியாது, நான் அருகில் இருந்து பார்த்தேன். தன் வாழ்கையில் தூணாக இருந்தவன் இறக்க தானும் ஒரு காரணமாகிவிட்டோமே என்ற எண்ணம் தான் விஜயகாந்தை இப்படி முடக்கி போட்டுவிட்டது. 


இந்த மன அழுத்தத்தில் இருந்து விஜயகாந்தை மீட்க ராவுத்தர் மாதிரி ஒருவரை கொண்டு வந்து அவர் இறக்கவில்லை, உயிரோடுதான் இருக்கிறார் என நம்ப வைக்க வேண்டும். இதுதான் விஜயகாந்தை மீட்க ஒரே வழி. இதை வெளிநாடுகளில் மனோத்தத்துவ சிகிச்சையாகவே மேற்கொண்டு வருகிறார்கள் என வெளிப்படையாக கூறியுள்ளார் இயக்குநர் பிரவீன் காந்தி.

Advertisement

Advertisement

Advertisement