• Jun 04 2025

நீத்துவிற்கு வலைவிரித்த விஜயா.. அடுத்த கல்யாணத்திற்கு ரெடியாகும் மனோஜ்.! டுடே எபிசொட்..

subiththira / 1 day ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, மனோஜ் ரோகிணி நித்திரையான பிறகு போனை எடுத்து உண்மையிலேயே ஆம்பளை கூட தான் கதைக்கிறாளா என்று பாக்கிறார். அந்த நேரம் பாத்து ரோகிணி நித்திரையால ழும்பி மனோஜுக்கு என்மேல சந்தேகம் வந்திட்டு என நினைத்து சந்தோசப்படுறார். மறுநாள், விஜயா வீட்டுக்கு நீத்து வந்து நிற்கிறார். அதைப் பார்த்து வீட்டில இருந்த எல்லாரும் ஷாக் ஆகுறார்கள். இதனை அடுத்து நீத்து ரவி நிற்கிறானா என்று அண்ணாமலையைப் பாத்துக் கேக்கிறார்.

பின் ஸ்ருதி எதுக்கு அவனைக் கூப்பிடனும் என்கிறார். அதனை அடுத்து நீத்துவப் பாத்து விஜயா நல்லா இருக்கிறீயா என்று கேக்கிறார். அதுக்கு நீத்து நான் நல்லா இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு விஜயாவின்ர காலில விழுகிறார். அதைப் பார்த்த ஸ்ருதி இவங்க எதுக்கு அத்தையோட காலில விழுகிறாங்க என்று ஜோசிக்கிறார். மேலும் எதுக்கு வந்தனீங்க என்று சொல்லுறீங்களா என்று நீத்துவைப் பாத்துக் கேட்கிறார்.


அதனை அடுத்து நீத்து ரவியைப் பாத்து புதுசா ரெஸ்டாரெண்ட் திறக்கப்போறேன் என்று சொல்லுறார். மேலும் அந்த ரெஸ்டாரெண்டில ரவியை working  partnerஆ சேர்த்துக் கொள்ளப்போறேன் என்கிறார். அதைக் கேட்ட ஸ்ருதி ரவிகிட்ட போய் பாத்தியா நான் அண்டைக்கு பேசின படியால தான் நீத்து இப்படி ஒரு முடிவெடுத்திருக்கிறாள் என்கிறார். பின் விஜயா புதுசா ரெஸ்டாரெண்ட் திறக்கிறது என்றால் நிறைய காசு முடியும் உன்கிட்ட இருக்குதா என்று நீத்துவைப் பாத்துக் கேட்கிறார்.

அதுக்கு நீத்து எங்கட அப்பா ரெஸ்டாரெண்ட் திறக்கிறதுக்காக 20 கோடி தந்திருக்கிறார் என்று சொல்லுறார். அதைக் கேட்ட விஜயா நிஜமான பணக்காரர் என்றால் சும்மாவா என்கிறார். மேலும் ஸ்ருதி பணக்கார வீட்டுப் பொண்ணு இந்த பார்லர் காரியை கழட்டி விட்டுட்டு ஏன் மனோஜுக்கு நீத்துவை கல்யாணம் பண்ணிவைக்க கூடாது என்று நினைக்கிறார். பின் அதை ஜோசிச்சுப் பாத்து சந்தோசப்படுறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement