• May 04 2024

பொன்னியின் செல்வன் படத்தின் ‘பொன்னி நதி’ பாடலைப் பாடிய விஜய்- ஷுட்டிங் ரகசியத்தைக் கூறிய சரத்குமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!


 நீண்ட கால முயற்சிக்கு பின் மணிரத்னத்தின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் பொன்னியின் செல்வன். இப்படத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், ஜெயம்ரவி, ஜெய்ராம் உள்ளிட்ட பல நடிகர்கள் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இப்படம் பிரமாண்டமாக வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே உள்ளதால் படக்குழுவினர் மிகவும் வேகமாக ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்த படத்தில் நடிகர் சரத்குமார், பெரிய பழுவேட்டரையர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.


அந்த வகையில் அண்மையில் கலந்து கொண்ட ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் விஜய் குறித்து பேசிய விடயம் உன்று வைரலாகி வருகின்றது. அதாவது விஜய்க்கு பொன்னியின் செல்வன் படத்தில் இடம் பெறும் ‘பொன்னி நதி’ பாடலை ரொம்ப பிடிக்குமாம். அதனை பாடிக் கொண்டே இருப்பாராம் என்றுமு் கூறியுள்ளார்.

மேலும் விஜய்யும் நடிகர் சரத்குமாரும் இணைந்து வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றனர்.அத்தோடு பொன்னியின் செல்வன் படத்தில் முதலில் விஜய்யை வந்தியத்தேவனாக நடிக்க வைக்க மணிரத்னம் விரும்பினாராம்.ஆனால் அந்த கதாப்பாத்திரத்தில் தற்பொழுது கார்த்தி நடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement