• May 07 2024

நடிகர் நிவின்பாலியின் பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் ரசிகரை எகிறி அடித்த பிரபல நடிகை

stella / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தான் நிவின் பாலி . இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான்  “சாட்டர்டே நைட்ஸ் . இப்படத்தில்  அஜூ வர்கீஸ், சய்ஜு குருப், சானியா அய்யப்பன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படம் அக்டோபர் 7ம் திகதி வெளியாகவுள்ள நிலையில் படத்தின் ப்ரமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அந்த வகையில் நேற்றைய தினம் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியானது ஹைலைட் மாலில் நடைபெற்றது.


ப்ரமோஷன் நிகழ்ச்சிக்காக வந்த சானியா அய்யப்பனை பாதுகாவலர்கள் அழைத்து சென்றபோது ரசிகர் ஒருவரை சானியா எகிறி சென்று அடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது


இதுகுறித்து விளக்கமளித்து பதிவிட்டுள்ள சானியா அய்யப்பன், தன்னோடு வந்த சக பெண் ஒருவருக்கு அந்த நபர் தொட்டு தொல்லை செய்ததாகவும், அதனால் அவரை தாக்கியதாகவும் தெரிவித்துள்ளார். அதேசமயம் நேற்று நடந்த ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரசிகர்களுக்கு நன்றியையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement