• Mar 26 2026

அஜித் சாருக்கு முதல் ஆளாக வாழ்த்தியதே விஜய் தான்! முற்றுபுள்ளி வைத்த சுரேஷ் சந்திரா

Aathira / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக வலம் வரும் அஜித், விஜய் ஆகியோர் தத்தமது வழிகளில் பயணித்தாலும் அவர்கள் இன்றுவரை நட்புடனே காணப்படுகின்றார். ஆனால் அவர்களுடைய ரசிகர்கள் தான் தல, தளபதி என தம்மிடையே அடித்துக் கொள்கிறார்கள்.

கடந்த ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார் தளபதி விஜய். அதன்பின் கட்சி தொடர்பான பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடத்திய மாநாடு மிகவும் பேசு பொருளானது.

d_i_a

அதேபோல் நடிகர் அஜித்தும் சினிமாவில் கவனம் செலுத்தினாலும் இன்னொரு பக்கம் கார், பைக் ரேஸில் அதிக ஆர்வம் கொண்டு வருகிறார். துபாயில் 24 மணிநேர கார் ரேஸில் அஜித்தின் அணி மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்தது.


மேலும் அஜித்துக்கு பத்ம பூஷன் விருதும் வழங்கப்பட்டது. ஆனால் அனைத்திற்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிக்கும் விஜய் இதற்கு எந்தவித ரியாக்ஷனும் கொடுக்கவில்லை என சர்ச்சைகள் கிளம்பின.


இந்த நிலையில், இந்த கருத்துக்களுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளார் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா. அதன்படி அவர் கூறுகையில், அஜித் சார் ரேசில் வெற்றி பெற்றதுமே விஜய் சாரிடம் இருந்துதான் முதலாவது வாழ்த்து வந்தது. 

அதேபோல அஜித் சாருக்கு விருது அறிவிக்கப்பட்ட போதும் விஜய் சாரிடம் இருந்துதான் வாழ்த்து வந்தது. அவர்கள் இருவருக்குள்ளும் நல்ல நட்பு உள்ளது. விஜய் சார் வாழ்த்து சொல்லவில்லை என்பதில் துளியும் உண்மை இல்லை என தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement