• May 03 2024

யோகிபாபுவுடன் ஜோடி சேரும் விஜய் டிவியின் முக்கிய நடிகை- புதிய படத்தின் அப்டேட்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ரசிகர்களைக் கவர்ந்த காமெடி நட்சத்திரங்கள் பலர் இருக்கின்றனர். இவர்களில் தற்கால சினிமாவில் முக்கியமான காமெடி நட்சத்திரமாக விளங்குபவர் தான் யோகிபாபு. இவர் தமிழில் விஜய் ,அஜித் ,விஷால், ஜெயம் ரவி ,தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து இருக்கின்றார்.

அந்த வகையில் அண்மையில் தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய பீஸ்ட் படத்தில் இறுதியாக நடித்திருந்தார். இது தவிர சோலோ ஹீரோ வாகவும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இதனடிப்படையில் “மெடிக்கல் மிராக்கல்” என்னும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இப்படத்தை சந்தானம் நடிப்பில் வெளியாகிய "ஏ1, பாரீஸ் ஜெயராஜ் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஜான்சன்.கே இயக்கி வருகின்றார். முழுக்க முழுக்க காமெடி ஜானரில், அனைவரும் ரசிக்கும் வகையில் இப்படம் உருவாக இருக்கிறது

இப்படத்தில் யோகிபாபுவுடன் இணைந்து தர்ஷா குப்தா நாயகியாக நடிக்கிறார். இவர்களுடன் மன்சூர் அலிகான், சேசு, கல்கி, மதுரை முத்து, டி.எஸ்.ஆர், நாஞ்சில் சம்பத், KPY வினோத், KPY பாலா, டைகர் தங்கதுரை, சித்தார்த் விபின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

முழுக்க முழுக்க அரசியல் காமெடியாக உருவாகவுள்ள “மெடிக்கல் மிராக்கல்” படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் இனிதே தொடங்கியது. இதில் படக்குழுவினர் பலரும் கலந்துக் கொண்டனர். சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement