• May 13 2024

ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சமந்தா

stella / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை சமந்தா. இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ,மலையாளம் ஆகிய மொழிகளில் ஏகப்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

இவர் தமிழில் இறுதியாக காத்துவாக்கில ரெண்டு காதல் என்னும் திரைப்படத்தில் விஜய்சேதுபதி மற்றும் நயன்தாரா ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இதனைத் தொடர்ந்து தமிழில் இயக்குநர் சாந்தரூபன் ஞானசேகரன் இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்கிறார்.

அதே போல தெலுங்கில் தெலுங்கில் ‘ஷகுந்தலம்’ 'யசோதா', குஷி படங்களில் நடித்து வருகிறார். நடிகை டாப்ஸியின் அவுட்சைடர்ஸ் ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ஒரு புதிய படத்தின் மூலம் பாலிவூட்டிலும் அறிமுகமாகவுள்ளார்.

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக சமந்தா, வீடியோக்கள், கிளாமர் புகைப்படங்களை பதிவேற்றுவார். மேலும் ரசிகர்களுடனும் கேள்வி பதில் கலந்துரையாடலிலும் கலந்து கொள்வார். சமீபத்தில் சமந்தாவின் போட்டோ ஷூட் புகைப்படங்கள் வைரல் ஆனது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புதிய போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சமந்தா வெளியிட்டுள்ள இந்த போட்டோஷூட் புகைப்படங்கள் ஈஷா சத்குருவின் Save Soil நிகழ்ச்சி தொடர்பானவை என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement