• Sep 17 2024

ரியலில் ஜோடி சேரவிருக்கும் விஜய் டீவி பிரபலங்கள்; யாருக்கும் தெரியாமல் நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் சேர்ந்து நடிப்பவர்கள் பலரும் நிஜ வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்திருக்கின்றார்கள். இவர்களைப் போன்றே சின்னத்திரையில் வலம் வருகின்ற நடிகர் நடிகைகள் பலரும் ஜோடி சேர்ந்த வண்ணமே உள்ளனர். இதற்கு எடுத்துக் காட்டாக விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி சீரியலில் ரீல் ஜோடியாக நடித்து வந்த ஆல்யா-மானசா ரியல் வாழ்க்கையிலும் ஜோடி சேர்ந்திருப்பதை குறிப்பிட்டுக் கூற முடியும்.

இவர்களை போன்றே தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் 'ராஜா ராணி 2' என்ற சீரியலில், கதாநாயகியை விட வில்லியின் நடிப்புத் தான் அமோகமாக இருக்கின்றது என்ற பாராட்டை வாங்கிய அர்ச்சனாவுக்கும், அதே தொலைக்காட்சியில் 'பாரதிகண்ணம்மா' என்ற சீரியலில் கதாநாயகனாக டாக்டர் பாரதி என்ற கதாபாத்திரத்தில் எதார்த்தமாக தனது நடிப்பினை வெளிப்படுத்திக் கொண்டிருக்கும் நடிகர் அருண்பிரசாத்திற்க்கும் விரைவில் திருமணம் ஆகப் போகிறது என சமீபத்தில் ஒரு சில தகவல் வெளியாகி இருந்தன.

எனினும் இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்பது தொடர்பான சந்தேகம் பலரின் மனதில் இருந்தது. ஆனால் இவர்கள் இருவருமோ சைலண்டாக தங்களது நிச்சயதார்த்தத்தினை நடாத்தி இருக்கின்றனர். அது மட்டுமன்றி கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் கூறியுள்ளார்கள். இதனை உண்மையாக்கும் விதத்தில் நடிகர் அருண் பிரசாத்தும் தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இந்த தகவலை பதிவிட்டுள்ளார்.

அதாவது இப்பதிவில், டாக்டர் பாரதிக்கு டும் டும் டும் என்ற வார்த்தைகள் அடங்கிய புகைப்படத்தையும் பதிவிட்டு, அதன் கீழே அருண்பிரசாத்-விஜே அர்ச்சனா காதல் திருமணம் 200% கன்ஃபார்ம்டு என்று பதிவிட்டிருக்கிறார். இதற்கு பல ரசிகர்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்ற அதேநேரம், 'பாரதி கண்ணம்மா' சீரியலில் சைலன்ட் ஆக இருக்கும் நடிகர் அருண்பிரசாத்திற்க்கும், 'ராஜா ராணி2' சீரியலில் அடாவடி செய்யும் அர்ச்சனாவிற்கும் எப்படி செட் ஆகும், ரீல் வாழ்க்கை வேறு, ரியல் வாழ்க்கை வேறு அல்லவா என்று புலம்பல் செய்தும் வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement